புதன், 5 ஜூலை, 2017

அவித்த முட்டை பிரை செய்வது எப்படி...




அவித்த முட்டை பிரை செய்வது எப்படி...


*தேவையான பொருட்கள் :*

முட்டை - 4

பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்

புதினா -   சிறிதளவு

மஞ்சள்தூள் -  அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

*செய்முறை :*

* கொத்தமல்லி, பச்சை மிளகாயைபொடியாக நறுக்கி கொள்ளவும்.ப.மிளகாயை பேஸ்ட் செய்தும்போடலாம்.

* முட்டையை வேக வைத்து ஓட்டைஉடைத்து கத்தியால் முட்டையைசற்று கீறி கொள்ளவும். அப்போதுதான் மசாலா உள்ளே போகும்.

* அடுப்பில் நான் - ஸ்டிக் பேனைவைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்ஊற்றி சூடானதும் நறுக்கியபச்சைமிளகாய்/பேஸ்ட்டை சேர்த்துவதக்கவும்.

* மிளகாயின் பச்சை வாசனைபோனதும் புதினாவைச் சேர்த்து ஒருபிரட்டு புரட்டவும்.

* இத்துடன் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் மிளகுத்தூளைச்சேர்த்து அடுப்பை மிதமான தீயில்வைத்து நன்கு கலக்கவும்.

* பொடிகளின் பச்சை வாசனைபோனதும் வேக வைத்தமுட்டையைச் சேர்த்து கிளறவும்.

* முட்டையில் மசால் ஏறிவிட்டதாஎன்று உறுதி செய்துவிட்டு அடுப்பைஅணைத்து பரிமாறவும்.

* சூப்பரான செட்டிநாடு அவித்தமுட்டை பிரை ரெடி.

*குறிப்பு :*

பச்சைமிளகாயை பேஸ்ட்டாககூடஉபயோகிக்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக