செவ்வாய், 18 ஜூலை, 2017

செம்பருத்தி பூக்கள் கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்தும்...



செம்பருத்தி பூக்கள் கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்தும்...

செம்பருத்தி - பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடியாகும்.  சிவப்புநிறப் பூக்களையுடைய பருத்திச் செடியே செம்பருத்தி என்று அழைக்கப்படுகிறது.  காசிபியம் ஆர்போரியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் பூக்களே மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகின்றன.  இந்தியா, இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனத்தைச் சேர்ந்தது.  இது கிழக்கு ஆசியாவில் தோன்றியது.  இதை சீன ரோஜா எனவும் அழைக்கின்றனர்.

இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது.  ஆயுர்வேதத்தில் இது ஜபா புஸ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்றும் அழைக்கப்படுகிறது.  செம்பருத்திப் பூக்கள் இரண்டு விதமாக இருப்பதுண்டு.  ஒன்று தாமரை மலர் போன்று அடுக்கு அடுக்காகவும், தனித்தனியான இதழ்களுடனும் இருக்கும்.  இந்தப்பூக்களில் தங்கச்சத்து இருப்பதால், தங்க பஸ்பம் சாப்பிடும்போது இந்தப் பூ கஷாயத்தைத் துணை மருந்தாகச் சாப்பிடுவார்கள். இந்தச்செடியின் நுனி முதல் வேர் வரை அனைத்தும் பயன்தரக்கூடியது.

இதே குடும்பத்தைச் சார்ந்த செம்பரத்தை செடிகளை நாம் வீட்டில் அழகுக்காக வளர்க்கும் செடிகளாகும்.  செம்பரத்தை செடிகளும், செம்பருத்திச் செடிகளும் வேறு, வேறு செடிகளாகும்.

செம்பருத்தியில் ஸ்டெர்குலிக் அமிலம், மால்வாலிக் அமிலம், அஸ்கோர்பிக் அமிலம், குளுக்கோசைடுகள், சயனின், சயனிடின், தயமின், நியசின், கரோட்டின் ஆகிய வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.

சில குழந்தைகள் உடல் பலகீனத்துடன் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருப்பார்கள்.  இந்தக் குறையை போக்கிட, ஐந்து செம்பருத்திப்பூக்களை ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு கால் லிட்டர் ஆகும்வரை நன்கு காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்து தொடர்ந்து கொடுத்து வர, சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் கிடைக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக