நார்த்தங்காய் ஊறுகாய்
*தேவையான பொருட்கள்*
நார்த்தங்காய் - ½ கிலோ
வத்தல் மிளகாய் – 20
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 15 கிராம்
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – ½ தேக்கரண்டி
*செய்முறை*
நார்த்தங்காய்கநை நன்கு கழுவி சுத்தம் செய்து சுத்தமான துணியால் நன்கு துடைத்துக் கொள்ளவும். பின்பு அதனை சிறு துண்டுகளாக நறுக்கி விதைகளை நீக்கிக் கொள்ளவும்
வெந்தயத்தை நன்கு வறுத்து தனியே வைக்கவும்
½ தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கி பெருங்காயத்தை சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்
பின்பு அதே பானில் வத்தல் மிளகாயை போட்டு வறுத்துக் கொள்ளவும்
வெந்தயம் மற்றும் பெருங்காயத்தை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்
உப்பு மற்றும் மிளகாயை தனியே பொடித்துக் கொள்ளவும்
பின்புவெந்தயம், பெருங்காயம், உப்பு, மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
பின்பு இவை அனைத்தையும் நறுக்கி வைத்துள்ள நார்த்தங்காயுடன் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு அதனை மூடி வைக்கவும். தினமும் ஒருமுறை காய்ந்த கரண்டி மூலம் அதனை கிளறி பின்பு மூடி வைக்கவும்.
நார்த்தங்காயின் தோல் கட்டடியானது எனவே 4-5 நாட்கள் வரை ஊற வைக்கவும்
5 நாட்கள் கழித்து 2 தேக்கரண்டி எண்ணெய் சூடாக்கவும். அதில் கடுகினை தாளிக்கவும். பின்பு அதனை ஊறுகாயுடன் சேர்த்து நன்கு கிளறவும்
பின்பு அதனை கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம். தினமும் நன்கு கிளறி பின்பு மூடி வைக்கவும்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக