அடைப் பிரதமன்
செய்ய தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், வெல்லம் - 100 கிராம், முந்திரி, திராட்சை - தலா 10, ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் - ஒன்று, நெய் - தேவையான அளவு, எண்ணெய் - சிறிதளவு அடைப் பிரதமன் செய்வது எப்படி? முதலில் தேங்காயை அரைத்து பால் எடுக்கவும். பச்சரிசியை ஊற வைத்து நைஸாக அரைக்கவும். ஒரு தட்டில் எண்ணெய் தடவி பச்சரிசி மாவை ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பின்பு சிறு சிறு துண்டு களாக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டவும். அடிகன மான ஒரு பாத்திரத்தில் அடை துண்டுகளுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு வெல்லக் கரைசல், ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். பிறகு, தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக