ருசியான கதம்ப சாதம்!!
குழந்தைகளுக்கு வித்தியாசமாக சாப்பாடு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த கதம்ப சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
சாதம் - 3 கப்
புளி - எலுமிச்சம்பழ அளவு
தனியா - 3 டீஸ்பு+ன்
கடலைப்பருப்பு - 3 டீஸ்பு+ன்
தேங்காய் துருவல் - 3 டீஸ்பு+ன்
வெங்காயம் - 3
மிக்ஸ்டு காய்கறி துண்டுகள் - 3 கப்(வேக வைத்தது)
மிளகாய் வற்றல் - 6
கறிவேப்பிலை - சிறிதளவு
துவரம்பருப்பு (வேக வைத்தது) - 1 கப்
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பு+ன்
நெய் - சிறிதளவு
கடுகு - ஒரு டீஸ்பு+ன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
🍪 முதலில் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து வறுத்து, அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் புளியுடன் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
🍪 பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். அதனுடன் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். பின் அதில் புளிக்கரைசலை விட்டு கொதிக்கவிடவும். பின்னர் நன்கு பச்சை வாசனைப் போக கொதித்ததும் அரைத்த விழுது, வேக வைத்த காய்கறி துண்டுகள் சேர்த்து கொதிக்கவிட்டு, வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
🍪 கடைசியாக கலவை நன்கு கலந்து வந்ததும் கறிவேப்பிலையைக் கிள்ளி போட வேண்டு. பின்பு சாதத்தில் நெய்விட்டு மசித்து பரிமாறினால். சத்தான கதம்ப சாதம் தயார்!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக