சனி, 15 ஜூலை, 2017

மசாலா பால் / MASALA MILK



மசாலா பால் / MASALA MILK

*பார்ட்டி ஸ்பெஷல்*


*தேவையான பொருட்கள்*

பால்                    –      1/2 லிட்டர்

சர்க்கரை                –      3 மேஜைக்கரண்டி

பிஸ்தா                 –      3 தேக்கரண்டி (நறுக்கியது)

குங்குமப்பூ             –      ஒரு சிட்டிகை

நீா                      –      1/2 கப்

ரோஸ் எசன்ஸ்          –      சில துள்கள்

*மசாலாவுக்கு*

பாதாம்                        –      20

முந்திரி பருப்பு              –      15

கச கசா                 –      1 தேக்கரண்டி

சோம்பு                 –      1 தேக்கரண்டி

நல்ல மிளகு                –      1/2 தேக்கரண்டி

ஏலக்காய்                     –      5

குங்குமப்பூ             –      ஒரு சிட்டிகை

பால்                   –      2 மேஜைக்கரண்டி (குங்குமப் பூவை ஊற வைக்க)

*செய்முறை*

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

பாலை கொதிக்க வைக்கவும்

பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் விடவும்

அதனுடன் சர்க்கரை சேர்க்கவும்

பின்பு நன்கு கலக்கி ஃப்ரிட்ஜில் வைக்கவும்

பின்பு ஒரு பாத்திரத்தில் குங்குமப் பூவை எடுத்துக் கொள்ளவும்

அதில் 3 மேஜைக்கரண்டி பாலை விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்

ஒரு சாஸ் பானில் 1/2  கப் நீரை விட்டு சூடாக்கவும்

பின்பு ஒரு பாத்திரத்தில் முந்திரி மற்றும் பாதாமை எடுத்துக் கொள்ளவும்

பின்பு அதனுடன் சோம்பு, நல்ல மிளகு, பிஸ்தா, கச கசா மற்றும் 1/2  கப் நீர் சேர்த்து நன்கு கலக்கி 15 நிமிடம் ஊற வைக்கவும்

பின்பு அதனை எடுத்து நன்கு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு அதனை பாலுடன் சேர்க்கவும்

பாதி குங்குமப் பூ கலந்த பாலை அதில் விட்டு நன்கு கலக்கி 15 நிமிடம் வைக்கவும்

பின்பு அதனை வடிகட்டவும்

பின்பு அதனுடன் மிதமுள்ள குங்குமப் பூகலந்த பாலை சேர்க்கவும்

பின்பு ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு அதனை 1 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்

பின்பு அதனை எடுத்து பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக