ஆரஞ்சு ஐஸ் கிரீம் / ORANGE ICE CREAM
*பார்ட்டி ஸ்பெஷல்*
*தேவையான பொருட்கள்*
ஆரஞ்சு சாறு – 2 கப்
சர்க்கரை – ¼ கப்
நீர் - ¼ கப்
எலுமிச்சை சாறு – 1-2 மேஜைக் கரண்டி
*செய்முறை*
ஆரஞ்சு பழங்களை எடுத்துக் கொள்ளவும்
அதன் தோலை நீக்கவும்
பின்பு அதனை பிழிந்து சாறு எடுக்கவும்
பின்பு அதனை வடிகட்டிக் கொள்ளவும்
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும்
அதனுடன் நீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைக்கவும். பின்பு அதனை எடுத்து ஆற வைக்கவும்
பின்பு ஆரஞ்சு பழச் சாறினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
பின்பு சர்க்கரை நீரை சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
பின்பு ஐஸ் க்ரீம் அச்சினை எடுத்து ஆரஞ்சு சாறு கலவையை அதில் விடவும்
அதனை மூடி இரவு முழுவதும் பிரிட்ஜில் வைக்கவும்
பின்பு அதனை எடுத்து பரிமாறவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக