திங்கள், 17 ஜூலை, 2017

பூண்டு பிரட் சீஸ் ரெசிபி / GARLIC BREAD CHEESE



பூண்டு பிரட் சீஸ் ரெசிபி / GARLIC BREAD CHEESE

*லஞ்ச் பாக்ஸ் recipes*

*தேவையான பொருட்கள்:*

பிரட்                     -       4 துண்டுகள்

பூண்டு                  -       6-7 பற்கள்

வெண்ணெய்         -       3 டேபிள் ஸ்பூன்

துருவிய சீஸ்         -       1 டேபிள் ஸ்பூன்

சில்லி ப்ளேக்ஸ்    -       1/2 டீஸ்பூன்

  மல்லித் தளை    -       1 டீஸ்பூன் (நறுக்கியது)

நெய்                    -       தேவையான அளவு

உப்பு                    -       தேவையான அளவு

*செய்முறை:*

முதலில் பூண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் வெண்ணெய், பூண்டு பேஸ்ட், சில்லி ப்ளேக்ஸ், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி, சீஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு பிரட் துண்டுகளை எடுத்து, அதனை சுற்றியுள்ளதை நீக்கிவிட்டு, அதன் மேல் கலந்து வைத்துள்ள கலவையை முன்னும், பின்னும் தடவிக் கொள்ள வேண்டும்.

பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் நெய் தடவி பிரட் துண்டுகளை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக டோஸ்ட் செய்தால், கார்லிக் பிரட் ரெடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக