வாழைப்பூ மசாலா
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ சிறியது 1 பெ.வெங்காயம் 2, தக்காளி 2, இஞ்சி சிறிய துண்டு,பூண்டு 4 பல்,மிளகாய் தூள் 2 டீஸ்பூன், தனியாத்தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு. கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிது.
எண்ணெய் 8 டீஸ்பூன்.
(தாளிக்க சீரகம் பிரியாணி இலை)
செய் முறை :
வாழைப்பூ வை நரம்பு நீக்கி நைசாக நறுக்கி தண்ணீர்ல சிறிது மோர் விட்டு ஊரவைக்கவும் .
வெங்காயம்( இஞ்சி பூண்டு ) தக்காளிய தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும்.
இப்ப கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த உடன் சீரகம்,பிரியாணி இலை போட்டு முதலில் வெங்காயம் பேஸ்ட் போட்டு வதங்கவும் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் வதங்கவும் வாழைப்பூ வை தண்ணீர் இல்லாமல் பிழிந்து போட்டு வதக்கவும். இப்ப உப்பு மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் போட்டு கிளறவும் பிறகு தக்காளி விழுது சேர்த்து கிளறி கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்ந்து சிறிது தண்ணீர் விட்டு ஒரு கொதி வரவும் அடுப்பை சிம்ல வைத்து மூடி போடவும் அப்ப அப்ப கிளறி விடவும் சுருங்கி எண்ணெய் வெளியே வரவும் இறக்கவும்.
சுவையான வாழைப்பூ மசாலா ரெடி.
(இத தோசை, சப்பாத்தி,சாதத்துடன் சாப்பிடலாம். சாதத்தில் கிளறினால் வெரைட்டி ரைஸ் மாதிரி அருமையா இருக்கும்.)
( குறிப்பு: வாழைப்பூல சுத்தமா துவர்ப்பு தன்மை இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறவங்க வாழைப்பூவை நைசாக நறுக்கி தண்ணீரில் போட்டு மூடி முதல் நாளே பிரிட்ஜ் ல வைத்து விட்டு அடுத்த நாள் செய்யலாம் உங்கள் விருப்பம் )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக