செவ்வாய், 11 ஜூலை, 2017

ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு.



ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு.


ஐயங்கார் ஸ்டைல் உணவுகளின் சுவையே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.

*தேவையான பொருட்கள் :*

வெண்டைக்காய் - 10
கத்திரிக்காய் - 1
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

*வறுத்து அரைப்பதற்கு…*

மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 5
எண்ணெய் - 1 டீஸ்பூன்

*தாளிப்பதற்கு…*

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

*செய்முறை :*

🕳 வெண்டைக்காய், கத்தரிக்காயை சமமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

🕳 ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாதும் ‘வறுத்து அரைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்.

🕳 நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

🕳 புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

🕳 அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

🕳 பிறகு அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறவும்.

🕳 சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடம் மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

🕳 மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த, பின் இறுதியில் அதனை குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

*சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு ரெடி!!!*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக