வெள்ளி, 21 ஜூலை, 2017

பச்சை பயறு தோசை....(Besarat)



பச்சை பயறு தோசை....(Besarat)

தேவையான பொருட்கள்:-

பச்சை பயறு ---------------- 1 கப்
பச்சரிசி மாவு --------------- 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் ------ 1
பச்சை மிளகாய் ----------- காரத்திர்க்கேற்ப
இஞ்சி --------------------------- சிறிய துண்டு  
சீரகம் --------------------------- 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு.
தேவையான அளவு எண்ணெய்.

செய்முறை:-

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

பச்சை பயறை முதல் நாள் இரவே நன்கு  கழுவி நீரில் ஊறவைத்து மறுநாள் காலை ஊறிய பருப்புடன் பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நைசாக அரைதெடுத்து பச்சரிசி மாவையும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.

தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி அரைத்த மாவை தோசை வார்த்து சுற்றிலும் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவி மூடி போட்டு ஒரு புறம் நன்றாக வேகவைத்து எடுத்து சுட சுட பரிமாறவும்.

நல்ல சத்தான இந்த தோசையுடன் இஞ்சி தொக்கு வைத்து சாப்பிட மிக மிக சுவையாக இருக்கும். விரைவில் ஜீரணமும் ஆகி விடும்.

தேங்காய் சட்னியும் இந்த தோசையுடன் வைத்து சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

குறிப்பு:- குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் போது  வெங்காயத்துடன் பொடியாக நறுக்கிய, விரைவில் வேகக்கூடிய  கேரட் , குடை மிளகாய் கொத்தமல்லி தழை இவற்றை தூவியும்  கொடுக்கலாம்.

பச்சரிசி மாவு சிறிது சேர்ப்பதால் தோசை நல்ல மொரு மொருப்பாக இருக்கும்.

பச்சை மிளகாய் அவரவர் காரதான்மைக்கேற்ப பார்த்து சேர்த்து கொள்ளவும்.

பச்சை மிளகாய் விரும்பாதவர்கள் காய்ந்தமிளகாயையும் சேர்த்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக