செவ்வாய், 11 ஜூலை, 2017

பீர்க்கங்காய் முட்டை கூட்டு



பீர்க்கங்காய் முட்டை கூட்டு

பீர்க்கங்காய் - 1/4 கிலோ
முட்டை - 4
பல்லாரி - 1
தக்காளி - 1
சாம்பார்த்தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
தேங்காய் - 2 கீத்து
முந்திரி - 6

செய்முறை : முட்டையை வேக வைத்து இரண்டாக நறுக்கவும். பீர்க்கங்காயை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கறிவேப்பிலை, பல்லாரி, தக்காளியை போட்டு நன்கு வதக்கவும். நறுக்கிய முட்டைகளை இதனுடன் சேர்த்து லேசாக கிளறவும். மற்றொரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து, பீர்க்கங்காயை நன்கு வதக்கவும். வதங்கியதும் முட்டை, தக்காளி, வெங்காய கலவையை இத்துடன் சேர்க்கவும். இப்போது தேவையான அளவு தண்ணீர், உப்பு, சாம்பார் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.  இப்போது தேங்காயை, முந்திரியுடன் சேர்த்து அரைத்து குழம்பில் போடவும். மேட்டர் முடிஞ்சுருச்சு... பீர்க்கங்காய் முட்டை கூட்டு ரெடி...
சாப்பிட்டு பாருங்க... அப்புறம் சொல்லுங்க...!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக