தினம் ஒரு கப் முருங்கைக்கீரை சூப்.
வெந்து கெட்டது அகத்தி கீரை வேகாமல் கெட்டது முருங்கைக்கீரை இது பழமொழி. முருங்கை கீரையை நன்றாக வேக வைத்து அதன் தண்ணீரை சூப் வைத்து குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
சிலருக்கு தலைமுடி மிகவும் குட்டையாக இருக்கும் ஒரு சில பெண்களுக்கு தலை முடி நீளமாக வளர்ந்திருக்கும். அப்படி முடி குறைவாக உள்ளவர்கள் முருங்கை சூப் குடித்து வந்தால் தலை முடி அடர்த்தியாக, நீளமாக வளரும்.
முருங்கைகீரை சூப் செய்யும் முறையை பார்ப்போம்:
முருங்கை கீரை : 2 கப்
வெண்ணெய் : 1 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளோர்: 1 தேக்கரண்டி
உப்புத்தூள், மிளகுத்தூள் : தேவைக்கேற்ப
முதலில் தண்ணீர் ஊற்றி கீரையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு கீரையை நன்கு வேகவைத்து கொள்ள வேண்டும்.
கீரை தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்துக்கள் அனைத்தும் தண்ணீரில் இறங்கிவிடும்.
பின்னர் திக்காக வேண்டும் என்பவர் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.
வடிகட்டிய கீரையை தண்ணீரில் மேலே உள்ள பொருட்கள் அனைத்தும் சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கி வைத்துவிடவேண்டும். பிறகு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து குடித்து வரலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக