வியாழன், 6 ஜூலை, 2017

முட்டை போண்டா



முட்டை போண்டா

மாலையில் காபி, டீயுடன் சூடாக ஏதாவது சாப்பிட விரும்பினால் முட்டை போண்டா செய்து சாப்பிடலாம்.

 இன்று இந்த முட்டை போண்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

*தேவையான பொருட்கள் :*

முட்டை - 6 (வேக வைத்தது)
கடலை மாவு - 1 கப்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
பச்சரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


*செய்முறை:*

* முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து வைக்கவும்.

* ஒரு பௌலில் கடலை மாவு, பச்சரிசி மாவு, பேக்கிங் சோடா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் வேக வைத்துள்ள முட்டையை, போண்டா மாவில் நன்கு பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

* அதேப் போன்று அனைத்து முட்டையையும் பொரித்து எடுக்க வேண்டும்.

* இப்போது சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் முட்டை போண்டா ரெடி!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக