சாம்பார் சாதம்
*தேவையானபொருட்கள்*
புழுங்கல்அரிசி – 1 கப்
துவரம்பருப்பு – 1/4 கப்
மஞ்சள்பொடி – 1/4 டீஸ்பூன்
கத்தரிக்காய் – 2
முருங்கைக்காய் – 1
பரங்கிக்காய் – 1/2 கப்
தக்காளி – 1
சின்னவெங்காயம் – 15
புளி – சிறிய எலுமிச்சையளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
*அரைக்க*
சிவப்புமிளகாய் – 5
மல்லி – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
*சாம்பார் சாதம் செய்முறை*
துவரம்பருப்பை மஞ்சள்பொடி போட்டு வேக வைத்துக் கொள்ளவும். அரிசியைக் கழுவி குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
காய்கறிகளை சதுரத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை
போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி,காய்கறிகள் சேர்த்து வதக்கி தண்ணீர்,உப்பு சேர்த்து வேக விடவும்.
காய்கறிகள் வெந்தவுடன் புளித்தண்ணீர்,அரைத்து வைத்துள்ள பொடி, வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதிக்கும் பொழுது வேக வைத்த சாதத்தை அதில் கலந்து நன்கு கிளறி சூடாகப் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக