பலன் தரக்கூடிய ஹெல்தியான உளுத்தம் பருப்பு கஞ்சி.!
எலும்புகளுக்கு பலன் தரக்கூடியது இந்த உளுந்தம் பருப்பு கருப்பட்டி கஞ்சி. இந்த கஞ்சி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையும் விரும்பி குடிப்பார்கள். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
*தேவையான பொருட்கள்:*
உளுந்தம் பருப்பு = 1 கப்
கருப்பட்டி / வெல்லம் துருவியது = 1/2 கப்
தண்ணீர் = 3/4 கப்
பூண்டு = 2
தேங்காய் துருவியது = 1/4 கப்
சுக்கு = சிறிய துண்டு
பால் = ஒரு கப் அல்லது தேவைப்பட்டால்
*செய்முறை :*
ஒரு குக்கரில் உளுத்தம் பருப்பு, உரிச்ச பூண்டு, சுக்கு எல்லாம் போட்டு 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
அதன் பின்னர் கருப்பட்டி / வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி வைத்து கொள்ளவும்.
உளுந்தம் பருப்பு நன்றாக வெந்தவுடன் அதில் காய்ச்சிய கருப்பட்டி, வெல்லம் பாகு, துருவின தேங்காயும் ஒன்றாக போட்டு ஐந்து நிமிடம் மறுபடியும் வேக வைக்க வேண்டும்.
தேவையென்றால் காய்ச்சின பாலையும் சேர்த்து ஐந்து நிமிடம் மறுபடியும் வேகவிட்டு இறக்கி வைத்தால் சுவையான உளுத்தம் பருப்பு கஞ்சி தயார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக