புதன், 19 ஜூலை, 2017

தலைக்கறி கிரேவி..



தலைக்கறி கிரேவி..


ஆட்டு தலை- 1 (சுத்தம் செய்தது)

வெங்காயம்-3

தக்காளி-4

கறிவேப்பிலை-ஒரு கொத்து

பச்சை மிளகாய்-4

இஞ்சிபூண்டு விழுது-4 ஸ்பூன்

சீரகத்தூள்-அரை ஸ்பூன்

மிளகாய் தூள்-1 ஸ்பூன்

மஞ்சள் தூள்- கால்ஸ்பூன்

எண்ணெய்-2 மேசைகரண்டி

பட்டை-1

ஏலக்காய்-2

கிராம்பு-3

உப்பு-தேவைக்கு


நாக்கு பகுதி மட்டும் எடுத்து தீயில் (தீயில் காட்டினால் தோல் உரிக்க ஏதுவாக இருக்கும்) காட்டி பின் மேலாக உள்ள தோலை உரிக்கவும்

கறியை சுத்தம் செய்யவும். மூளையை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை,ஏலக்காய்,கிராம்பு,கறிவேப்பிலை,பச்சை மிளகாய் சேர்க்கவும்.

பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்

இப்போது தூள் வகைகளை சேர்த்து நன்கு கிளறவும்

பின் தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.

பின் கறியை சேர்த்து கொஞ்சமாக நீர் தெளித்து குக்கரில் 2 விசிலுக்கு வைக்கவும்.

பின்னர் மூளையை சேர்த்து சிம்மில் வைத்து குக்கரை மூடாமல் வேகவிடவும்

தலைக்கறி கிரேவி தயார்

முதலிலேயே மூளையை சேர்ப்பதால் கரைந்து விடும்.

குக்கரில் செய்யாமலும் செய்யலாம்.அதில் இன்னும் சுவை கூடும்.

முடிந்த வரை பெரிய துண்டுகளாக வெட்ட சொல்லவும்.

அப்போது தான் எலும்பு நொறுங்காமல் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக