நெய் சோறு சமையல் குறிப்பு...
அரிசி - 1 கப்,
தேங்காய்ப் பால் - 2 கப்,
கீறிய பச்சை மிளகாய் - 4,
பொடியாக நறுக்கிய தக்காளி - 2,
நெய் - 1/4 கப்,
கொத்தமல்லி, புதினா - 1 கைப்பிடி,
உப்பு - தேவைக்கு.
*தாளிக்க...*
ஏலக்காய் - 4,
பட்டை - 4,
கிராம்பு - 2,
பிரிஞ்சி இலை - 1,
சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்.
*வதக்க...*
நெய் (அல்லது) எண்ணெய் - 1/4 கப்,
மெலிதாக நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்,
இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்.
*எப்படிச் செய்வது?*
கடாயில் நெய் ஊற்றி உருகியதும் தாளிப்புப் பொருட்களை ஒவ்வொன்றாகப் போட்டுத் தாளிக்கவும்.
அதில் வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் கொத்தமல்லி, புதினா, இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
பின் அரிசி, தக்காளியை போட்டு வதக்கி, தேங்காய்ப் பால் ஊற்றி இரு மடங்கு தண்ணீரும் அளந்து ஊற்றி உப்பு போட்டு குக்கரில் வைக்கவும்.
சாதத்தை இறக்கி, மீதமிருக்கும் 1/4 கப் நெய்யை ஊற்றிப் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக