செவ்வாய், 11 ஜூலை, 2017

பிரட் பிட்சா



பிரட் பிட்சா..

*தேவையான பொருட்கள்:*

 கோதுமை/வெள்ளை பிரட் துண்டுகள் - 3

 வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

 குடைமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

சீஸ் - 3 டேபிள் ஸ்பூள் (துருவியது)

தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

மிளகு - 1 சிட்டிகை

 சில்லி ப்ளேக்ஸ் - 1 சிட்டிகை

*செய்முறை:*

முதலில் பிரட் துண்டுகளின் ஒரு பக்கத்தில் தக்காளி சாஸ் தடவி, பின் வெங்காயத்தை தூவி விட வேண்டும்.

 பின்னர் அதன் மேல் குடைமிளகாய், மிளகுத் தூள், சில்லி ப்ளேப்ஸ் தூவி, பின் துருவிய சீஸ் தூவி விட வேண்டும்.

 பிறகு மைக்ரோவேவ் ஓவனை 200 டிகிரி செல்சியஸில் சூடேற்றி, பின் அதனுள் பிரட் துண்டுகளை வைத்து, 5-7 நிமிடம் பேக் செய்து வெளியே எடுத்தால், பிரட் பிட்சா ரெடி!!!

 *குறிப்பு:*

 மைக்ரோவேவ் ஓவன் இல்லாதவர்கள், பிரட் துண்டுகளை ஆரம்பத்திலேயே நெய் தடவி டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு இதர பொருட்களைக் கொண்டு அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

 பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதன் மேல் பிரட் துண்டுகளை வைத்து, சீஸ் உருகியதும் இதனை இயக்கி விட வேண்டும்.

இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக