திங்கள், 17 ஜூலை, 2017

சேனைக்கிழங்கு சிப்ஸ் (elephant yam chips)



சேனைக்கிழங்கு சிப்ஸ் (elephant yam chips)


*தேவையானவை:*

சேனைக் கிழங்கு        -      250 கிராம்

மஞ்சள்தூள்             -      ஒரு சிட்டிகை

மிளகாய் தூள்            -      1 டீஸ்பூன்

காயத் தூள்              -      சிறிதளவு

எண்ணெய்              -      500 மில்லி

உப்பு                     -      தேவையான அளவு.

*செய்முறை:*

*சேனையை தோல் சீவி, வறுவலுக்கு நறுக்கும் விதத்தில் சிறு துண்டுகளாக நறுக்கி, நன்றாகக் கழுவி தண்ணீர் வடியவிடவும்.

*இதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி,காய்ந்ததும் பிசிறி வைத்திருக்கும் சேனைத் துண்டுகளைப் பொரித்து எடுத்து, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.

*இப்போது சேனைக்கிழங்கு  சிப்ஸ்  ரெடி.

*குறிப்பு:*

காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடிவைத்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக