மீன் புட்டு
எல்லா குழந்தைகளும் மீனை விரும்பி உண்பதில்லை அதில் முள் இருக்கும் காரணத்தால்.
எனவே அவர்களுக்கு மீன் புட்டு செய்து கொடுக்கலாம் விரும்பி உண்பார்கள்.
*தேவையான பொருட்கள்:*
1. 3 பீஸ்(300gm) - வஞ்சிரம் மீன்
2. 2 – வெங்காயம்
3. 2 – காய்ந்த மிளகாய்
4. 3 ஸ்பூன் – எண்ணெய்
5. 1 ஸ்பூன் – பெப்பர் தூள்
6. ½ ஸ்பூன் – மஞ்சள் தூள்
7. ½ ஸ்பூன் – கடுகு
8. உப்பு -தேவைகேற்ப
9. கொத்தமல்லி அலங்கரிக்க
10. இஞ்சி, பூண்டு (தேவைக்கு)
*செய்முறை:*
இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் மீனை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
மிளகாயை மிக்சியில் ஒரு சுற்று அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து,மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
பின் வேகவைத்த மீன்,மஞ்சள்,உப்பு சேர்த்து வதக்கவும்,
பின் மிளகு தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
*மீன் பயன்கள்:*
1. ஆஸ்துமா: மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்
2. கண் பாதிப்பு: மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.
3. கேன்சர்: பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.
4. இருதய நோய்: இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.
அசத்தலான மீன் டிப்ஸ்
🐠 மீன் குழம்பிற்கு பொதுவாக செதில் மற்றும் நடுமுள் உள்ள கடல் மீன் சுவையாக இருக்கும். முக்கியமாக மீன் குழம்பு செய்யும்போது அதிக நேரம் கொதிக்க வைத்தால் மீன் குழம்பின் சுவை குறைந்து விடும்.
🐠 மீனை கனமான துண்டுகளாக வெட்டி மிளகு, எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து சுத்தமான காகிதத்தில் டால்டா தடவி மீனைச் சுற்றி, இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைத்து வெந்ததும் சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
🐠 ஒவ்வொரு ஓவனிலும் ஒவ்வொரு மாதிர்pயான மின்சக்தியின் அளவுகள் குறிக்கப்பட்டு இருக்கும். அதில் இருக்கும் குறிப்பீட்டு முறையை படித்து புர்pந்து கொண்ட பிறகே ஓவனை பயன்படுத்த வேண்டும்.
🐠 பிர்pயாணி செய்வதற்கு வதக்கும்போது தக்காளி, வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது ஆகியவற்றின் தொக்கு சற்று தளதளவென்றிருந்தால் தண்ணீர்pன் அளவை சிறிது குறைத்து கொள்ளலாம்.
🐠 ஆற்று மீனின் சேற்று வாடை போக வேண்டும் என்றால் மீனை உப்புப் போட்ட தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
🐠 மீன் குழம்பு செய்யும்போது அதில் உருளைக்கிழங்கு சேர்த்து கொண்டால் அதன் சுவை பலமடங்காகும்.
🐠 மீன் பொரிக்கும் போது தவாவில் ஒட்டி கொள்ளும் அதை தவிர்க்க தவாவில் அரிசி மாவை போட்டு லேசாக வறுத்து விட்டு எண்ணெய் ஊற்றி பொரிக்க வெண்டும்.
🐠 மீனை பொரிக்கும் போது எண்ணெயுடன் சிறிது பட்டர் கலந்தால் சுவையாக இருக்கும்.
🐠 மீனை பொரிப்பதற்கு ஒரே மாதிரி மசாலா போடாமல் ஒரு முறை மிளகாய் தூள் அடுத்த முறை சிக்கன் மசாலா அடுத்தமுறை மிளகு மசாலா என்று போட்டு பொரித்தால் சுவை நன்றாக இருக்கும்.
🐠 மீனுக்கு மசாலா கலக்கும் போது, அதில் இரண்டு தேக்கரண்டி ஓட்ஸ் மற்றும் கார்ன் பிளேக்ஸ் சேர்த்தால் மீன் நல்ல சுவையாகவும், மிருதுவாகவும் வரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக