புதன், 5 ஜூலை, 2017

மட்டன் குழம்பு


மட்டன் குழம்பு

*தேவையானவை*

ஆட்டிறச்சி – 1kg
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கடுகு – தேவையான அளவு
சீரகம் – தேவையான அளவு
தக்காளி – 2
இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – 1
தேசிக்காய் – பாதி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள்த்தூள் – 1மேசைக்கரண்டி
கறித்தூள் – 3மேசைக்கரண்டி
வினாகிரி – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
இறைச்சிச்சரக்குத்தூள் – 1மேசைக்கரண்டி

*செய்முறை*

இறைச்சியை கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்சள்த்தூள், வினாகிரி என்பன சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

பின் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளி என்பவற்றை வெட்டிவைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டுக் கொதிக்க வைக்க வேண்டும்.

 கொதித்ததும் கடுகைப்போட வேண்டும். கடுகு வெடித்ததும் சீரகத்தைப் போட்டு பின் வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்க வேண்டும்.

 வதங்கியதும் இஞ்சி, பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை என்பவற்றை அதனுடன் போட்டு வதக்க வேண்டும்.

வதங்கியதும் இறைச்சியை போட்டு நன்கு பிரட்டி சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி அவியவிடவேண்டும்.

 சிறிது நேரத்தில் கறித்தூள் போட்டு நன்கு கலந்து பின் மூடி அவியவிடவேண்டும்.

 இறைச்சி நன்கு அவிந்ததும் இறைச்சிச்சரக்குத்தூள் போட்டு நன்கு கலக்கி பின் இறக்க வேண்டும்.

 இறக்கியதும் தேசிக்காயைப் புழிந்துவிட வேண்டும். பின் பரிமறலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக