திரிகடுகம் காபி...
*தேவையானவை:*
மிளகு – 30 கிராம்,
சுக்கு – 50 கிராம்,
திப்பிலி – 5 கிராம்,
கருப்பட்டி, காபி தூள் – தேவையான அளவு.
*செய்முறை:*
மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றை நன்றாகப் பொடித்துக்கொள்ள வேண்டும்.
ஒரு லிட்டர் தண்ணீரில் கருப்பட்டியைக் கரைத்து, அதனுடன் காபி தூள், திரிகடுகம் தூள் கலந்து கொதிக்கவைத்து சூடாகப் பருகலாம்.
*பலன்கள்:*
சித்த மருத்துவத்தில் ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை’ எனச் சொல்வார்கள்.
*சுக்கை தோல் சீவித்தான் பயன்படுத்த வேண்டும்.*
மிளகு, பசியைத் தூண்டும்; பித்தத்தைச் சமப்படுத்தும்; உடலில் உள்ள நச்சுத்தன்மையை முறிக்கும்.
திப்பிலி, கோழையைப் போக்கும். சளிப் பிரச்னைகள் நீக்கி, உடலை உற்சாகம் அடையச் செய்யும்.
பால் சேர்க்காமல் கருப்பட்டி சேர்த்து அருந்துவதால், உடல் வலுவாகும்.
மழைக்காலத்தில் காலை – மாலை இந்த காபி குடித்துவருவது மிகவும் நல்லது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக