புதன், 4 ஜனவரி, 2017

வெஜிடபிள் கைமா இட்லி | kaima idli

வெஜிடபிள் கைமா இட்லி | kaima idli

தேவைாயன பொருள்கள்

இட்லி - 8 
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள்- 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
வேக வைத்த பச்சைப் பட்டாணி - 1/4 கப்
குடை மிளகாய் - 1
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு 
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு. 

செய்முறை

ஆறிய இட்லியை சிறிய துண்டு களாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி இட்லி துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். 

மற்றொரு கடாயில், சிறிது எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைப் பட்டாணி குடைமிளகாயை சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மிளகாய்தூள், தனியா தூள், கரம் மசாலாவை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதங்கியதும் இட்லி துண்டுகளை சேர்த்து கிளறி 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து கொத்தமல்லித் தழை தூவி,இறக்கி சூடாக பரிமாறவும்.
சுவையான கீமா இட்லி ரெடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக