தேங்காய் அவல் உப்புமா !
காலை வேளையில் எளிமையான காலை உணவை செய்ய நினைத்தால், தேங்காய் அவல் உப்புமா செய்து சாப்பிடுங்கள். இந்த உணவு செய்வதற்கு மிகவும் சுலபமானது மட்டுமின்றி, வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த தேங்காய் அவல் உப்புமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
அவல் - 3 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
சட்னிக்கு :
தேங்காய் - 1ஃ2 கப்
வரமிளகாய் - 3
பு+ண்டு - 2 பற்கள்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
🍛 முதலில் தேங்காய், வரமிளகாய், பூண்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சட்னியை அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அவலைப் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் தனியாக ஊற வைத்துக் கொள்ளவும்.
🍛 பின் அரைத்து வைத்துள்ள சட்னியில் அவலைப் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து பின் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கிக் கொள்ளவும்.
🍛 இறுதியில் சட்னியில் ஊறவைத்த அவல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் பிரட்டி இறக்கினால், தேங்காய் அவல் உப்புமா தயார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக