சிக்கன் 65
தேவையான பொருட்கள் -#1
சிக்கன் 1 கிலோ ( 40 கிராம் துண்டு)
இஞ்சி பூண்டு விழுது 4 மேஜைக்கரண்டி
மைதா மாவு 1 கைப்பிடி
அரிசி மாவு 1 கைப்பிடி
பச்சை மிளகாய் 6 ( விழுதாக அரைக்கவும்)
முட்டை 3 ( உடைத்து கொள்ளவும்)
வரமிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
மல்லித்தூள் 1 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 1 கைப்பிடி
மிளகு தூள் 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 15 ( விழுதாக அரைக்கவும்)
கொத்தமல்லி இலைகள் 1 மேஜைக்கரண்டி ( பொடியாக நறுக்கியது)
புதினா இலைகள் 1 மேஜைக்கரண்டி ( பொடியாக நறுக்கியது)
எலுமிச்சை பழச்சாறு 3 மேஜைக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
பழுத்த தக்காளி 1 ( விழுதாக அரைக்கவும்)
மரச்செக்கு கடலெண்ணய் பொறிப்பதற்கு தேவையான அளவு
தேவையான பொருட்கள்-#2
பெரிய வெங்காயம் 1 ( பொடியாக நறுக்கியது)
குடமிளகாய் 1 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 6 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி சாஸ் 2 மேஜைக்கரண்டி
கறிவேப்பில்ல 1 கொத்து
மிளகு தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
பொறித்த கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி
செய்முறை
1. சிக்கனை நன்றாக சுத்தமாக கழுவிய பின்னர் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து குறைந்தபட்சம் 1 மணி நேரம் நல்ல காயும் வெயிலில் வைத்து ஊற வைக்க வேண்டும்.
2. இப்பொழுது வடச்சட்டியில் பொறிப்பதற்கு தேவையான அளவிலான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊறவைத்தள்ள சிக்கனை போட்டு நன்றாக முறுகலாக பொன்னிறமாக வறுத்து எடுத்துவைக்கவும்.
3. இப்பொழுது மற்றுமொரு கெனமான அகன்ற வடச்சட்டியில் பொறித்த எண்ணெய் 4 மேஜைக்கரண்டி ஊற்றவும்.
4. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டும்.
5. அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
6. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள குடமிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.
7. அதில் 2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸை ஊற்றி நன்றாக வதக்கவும், அதில் தேவையான அளவிலான உப்பை சேர்த்து நன்றாக வதக்கவும்.
8. அதில் சிறிது தண்ணீர் சேர்த்துகோங்க , அதில் மிளகு தூளை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். அதில் பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக