செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி
வெண்டைக்காயுடன் புளி சேர்த்து செய்யும் இந்த வெண்டைக்காய் மண்டி சூப்பராக இருக்கும்.
இப்போது இதை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
*தேவையான பொருட்கள்:*
வெண்டைக்காய் - 1 1/2 கப்
சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 8 பல்
தக்காளி - 1
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
ஊற வைத்து கழுவிய அரிசி நீர் - சிறிது
*தாளிப்பதற்கு…*
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
*செய்முறை:*
* வெண்டைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஊற வைத்து கழுவிய அரிசி நீரில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, தாளித்த பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வெண்டைக்காயை சேர்த்து, அதில் உள்ள பிசுபிசுப்புத்தன்மை போகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு வாணலியில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, வெண்டைக்காய் பாதியாக வெந்ததும் அத்துடன் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
* சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி ரெடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக