ஞாயிறு, 15 ஜனவரி, 2017

ஊத்துகுளி மட்டன் ஃப்ரை

ஊத்துகுளி மட்டன் ஃப்ரை

இந்த மட்டன் ஃப்ரையை நான் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி செய்து உள்ளேன்.

ஆனால் உண்மையில் இதை பசுநெய் மற்றும் பசுவெண்ணை ஊற்றி செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள்
மட்டன் 1 கிலோ
உப்புத்தூள் தேவையான அளவு
மஞ்சள்தூள் 2 சிட்டிகை
வரமிளகாய் தூள் 1 1/2 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
தேங்காய் பால் 1/4 கப்
கசாகசா பேஸ்ட் 1 மேஜைக்கரண்டி

மட்டன் மசாலா பொடி
லவங்கம் 12
ஏலக்காய் 2
மிளகு 2 தேக்கரண்டி
பட்டை 1 இன்ச்
அண்ணாச்சி மொக்கு  1

கொத்தமல்லி இலைகள் 1/2 கட்டு ( பொடியாகநறுக்கிய)
சின்ன வெங்காயம் 15( பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் 8 ( பொடியாக நறுக்கியது)
தண்ணீர் 1 கப்
மரச்செக்கு கடலெண்ணய் 6 மேஜைக்கரண்டி

செய்முறை
1. ஒரு வடசட்டியில் எண்ணெய் விடாமல் மட்டன் மசாலா பொடி அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக மணம் வீசும் வரை வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு நன்றாக நைசாக பொடியாக அரைத்து கொள்ளவும்.

2. இப்பொழுது பிரஷர் குக்கரில் மரசெக்கு கடலெண்ணய் , மட்டன் மசாலா தூள் மற்றும் கொத்தமல்லி இலைகளை தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து 3 விசில் விட்டுகோங்க.

3. நன்றாக ஆவி அடங்கிய பின்னர் பிரஷர் குக்கரின் மூடியை திறக்கவும்.

4. இப்பொழுது ஒரு இரும்பு வடச்சட்டியில் மரசெக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி ஊற்றி காய்ந்ததும்அதில் பிரஷர் குக்கரில் உள்ள வேகவைத்த மட்டன் கலவையை போட்டு நன்றாக 20 நிமிடங்கள் வரை வதக்கவும்.

5. மட்டன் துண்டுகளை பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும், பின்பு அதில் பொடியாக பொடித்து வைத்துள்ள மட்டன் மசாலா தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.

6. இடை இடையே மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக சிறுதீயில் கிளறவும்.

7. இறுதியில் கொத்தமல்லி இலைகளை தூவி நன்றாக வதக்க வேண்டும். பிறகு இறக்கி பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக