சுரைக்காய் ஊத்தப்பம்
தேவையானவை
சுரைக்காய் துருவல் – 1 கப்
கோதுமை மாவு – ஒன்றரை கப்
உளுந்து – அரை கப்
மிளகாய் தூள் – சிறிது
உப்பு எண்ணெய் – தேவைக்கேற்ப
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிது
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது
செய்முறை
சுரைக்காயை தோல் சீவி கேரட் துருவலில் துருவிக் கொள்ளவும். உளுத்தம்பருப்பை ஊற வைத்து அரைக்கவும். கோதுமை மாவுடன் உளுத்தம் மாவையும் தேவையான உப்பு தேர்த்து கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு துருவிய சுரைக்காய், நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கவும். ஆறியதும், கோதுமை மாவு கலவையில் போட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும். இந்த மாவை ஊத்தப்பமாக ஊற்றி, எண்ணெய் விட்டு நன்கு வெந்ததும் பரிமாறவும். காரச் சட்னி அல்லது இட்லிப்பொடியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக