குதிரைவாலி கிச்சடி
*தேவையான பொருட்கள்*:-
1) குதிரைவாலி அரிசி-1 கப்(கழுவி 15நிமிடங்கள் ஊற வைக்கவும்)
2) கேரட்-2
3)பீன்ஸ்-8
4)பச்சைப்பட்டாணி-1/4
கப்
5)பெரிய வெங்காயம்-1
6)தக்காளி-1
7)பச்சைமிளகாய்-2
8)இஞ்சி,பூண்டு(பொடியாக நறுக்கியது கொஞ்சம்)
9)வரமிளகாய் தூள்-1/2 டேபிள் ஸ்பூன்
10)கறிமசால் தூள்-1/2 டேபிள் ஸ்பூன்
11)பட்டை-1,கிராம்பு-2,ஏலக்காய்-1, பிரியாணி இலை-1
12)முந்திரி-10
13)எண்ணெய்
14) நெய்
15)கறிவேப்பிலை
16)மல்லித்தலை
*செய்முறை*:-
🍲 கடாயை சூடாக்கி,எண்ணெய், நெய் சேர்த்து, சிறிது சூடானதும்,பட்டை,கிராம்பு,ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து பொரிக்கவும்
🍲 பிறகு நறுக்கிய பூண்டு,இஞ்சி சேர்த்து வதக்கி,பெ.வெங்காயம்,கறிவேப்பிலை,தக்காளி சேர்த்து வதக்கி பின்பு காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
🍲பிறகு வரமிளகாய் தூள்,கறிமசால் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் 5நிமிடங்கள் வேக விடவும்.
🍲 பிறகு அதில் 2-கப் தண்ணீர் சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
🍲 கொதித்தவுடன் குதிரைவாலி அரிசியை சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் வேகவிடவும்.
🍲 வெந்த பிறகு மல்லி இலை,நெய்யில் வறுத்த முந்திரியை சேர்க்கவும்.
🍲*இப்பொழுது சத்துமிகுந்த சுவையான குதிரைவாலி கிச்சடி ரெடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக