வெள்ளி, 6 ஜனவரி, 2017

லெமன் பெப்பர் மீன் வறுவல் -

லெமன் பெப்பர் மீன் வறுவல் - Lemon Pepper Fish Fry #saringo #saringosamayal #fishfry
தேவையான பொருள்கள்

வஞ்சிரம் மீன் - அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்
லெமன் சாறு - 3 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - 3 ஸ்பூன்
உப்பு - தேவைாயன அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பெருஞ்சீரகம் - 2 ஸ்பூன்
கருப்பு மிளகு - 2 ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் மிளகு மற்றும் பெருஞ்சீரகம் எடுத்து பொன் நிறமாகும் வரை வறுத்து ஜாரில் அதை போட்டு பொடித்து கொள்ளவும்.

ஒரு தட்டில் அதை எடுத்து இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும்.

மீன் துண்டுகளை எடுத்து கலவையில் நன்கு புரட்டி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி மீன்களை போட்டு இருபுறமும் பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.

சுவையான லெமன் பெப்பர் மீன் வறுவல் ரெடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக