கேரட் பீன்ஸ் சூப்
தேவையான பொருள்கள்
கேரட் - 2
தக்காளி - 2
வெங்காயம் - 1
பீன்ஸ் - 10
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
சீரகத் தூள் - அரை ஸ்பூன்
மிளகு தூள் - 2 ஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் கேரட் மற்றும் வெங்காயம், பீன்ஸ் பொடியாக நறுக்கி வைக்கவும்
பின் ஒரு குக்கரில் கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் , தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு நன்றாக வேக விடவும்.
பின் அவற்றை நன்கு மசித்து விடவும்.
பின் ஒரு சிறிய கடாயில் வெண்ணெய் ஊற்றி சீரகத் தூள், .
மிளகு தூள் சேர்த்து பின் மசித்து வைத்துள்ள கலவையை சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும்.
சுவையான கேரட் பீன்ஸ் சூப் ரெடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக