செவ்வாய், 17 ஜனவரி, 2017

பச்சரிசி பால் பொங்கல்!

பச்சரிசி பால் பொங்கல்!

 பொங்கல் திருநாளன்று சர்க்கரை பொங்கல் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. சர்க்கரை பொங்கலுடன், பச்சரிசி பால் பொங்கலும் செய்யலாம். அதிலும் பச்சரிசி கொண்டு பால் பொங்கல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இப்போது பச்சரிசி பால் பொங்கலை எப்படி எளிய செய்வதென்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

பச்சரிசி - 2 கப்

கல்கண்டு - 1 கப் (பொடித்தது)

பாசிப்பருப்பு - அரை கப்

பால் - 2 கப்

தண்ணீர் - 2 கப்

முந்திரி - 8

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

நெய் - 100 கிராம்

செய்முறை :

🍪 முதலில் பாசிப்பருப்பை நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பச்சரிசியை நன்கு கழுவி, கல்கண்டு, பால் மற்றும் தண்ணீர் சேர்த்து 4 அல்லது 5 விசில் விட்டு குக்கரில் வேக வைக்க வேண்டும்.

🍪 பின்னர் சூடு தணிந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பு சேர்த்து அடிபிடிக்காமல், மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும்.

🍪 கடைசியாக நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து கலவையுடன் சேர்க்கவும், ஏலக்காய் பொடி சேர்த்து ஒன்றாக கலந்து இறக்கினால் பால் பொங்கல் தயார்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக