கார சட்னி (தக்காளி வெங்காய சட்னி)
தக்காளி வெங்காய சட்னி (அ) கார சட்னி பல வித மூலிகைகள் மற்றும் மசாலா பொருள்களை கொண்டு செய்யப்படுவதாகும். இங்கு விளக்கப்பட்டுள்ள செய்முறை எளிதான ஒன்றானாலும் இட்லி, தோசை, ஆப்பம், அடை மற்றும் பெசறட்டுக்கு அற்புதமான சுவை சேர்க்ககூடியதாகும்.
தேவையான பொருள்கள் :
நறுக்கிய தக்காளி - 3
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 4
உறித்த பூண்டு - 2 பகுதிகள்
புளி -நெல்லிக்காய் அளவு உருண்டை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை (இது சட்னிக்கு நல்ல நிறம் கொடுக்கும்)
உப்பு -சுவைகேற்ப்ப
கறிவேப்பிலை - 1 காம்பு
கொத்தமல்லி - கைப்பிடி அளவு
செய்முறை :
சட்னி செய்வதற்கு :
1) வாணலியில் எண்ணெயை சுட வைத்து, அதில் கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்.
2) கடுகு வெடித்தவுடன் பூண்டும் வெங்காயமும் சேர்க்கவும்.
3) வெங்காயம் பொன் நிறமாக மாறும் வரை வறுத்து விட்டு,அதனுடன் தக்காளியை சேர்க்கவும்.
4) நன்கு வறுத்த பின் காய்ந்த மிளகாய்,மஞ்சள் பொடி,பெருங்காயம் மற்றும் உப்பை சேர்க்கவும்.
5) சிறிது நேரத்திற்கு பிறகு, தக்காளி நன்றாக வெந்து, அதன் பச்சை வாசனை நீங்கி இருக்கும்.
6) அடுப்பை அணைக்க இது தக்க தருணம். இப்போது அதில் புளியையும், கொத்தமல்லியையும் சேர்க்கலாம்.
7) 10 நிமிடங்கள் ஆற வையுங்கள்.
8) இப்போது நன்றாக அதை விழுதாக்கி ஒரு குவளையில் இட்டு விடுங்கள்.
தாளித்தல் :
9) ஒரு சட்டியில் எண்ணெயயை சுட வைத்து,அதனுடன் கடுகு மற்றும் உளுந்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
10) கடுகு வெடித்தவுடன், அதனுடன் கறிவேப்பிலை கலந்து விடுங்கள்.
11) பின்பு இதனுடன் சட்னியை நன்கு கலந்து பரிமாறுங்கள
மிளகு காளான்
Pepper Mushroom Fry
குடமிளகாய் மற்றும் காளான் கொண்டு செய்யப்படும் இந்த எளிய உணவு வகை ரொட்டி மற்றும் புலவுடன் சேர்ந்தால் நாவூறும் சுவை தரும்.
வேண்டிய பொருள்கள் :
நன்கு கழுவி, நறுக்கப்பட்ட காளான்கள் - 12 - 15
வெட்டப்பட்ட குடமிளகாய் - 2-3
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சமையல் எண்ணை - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
சன்னமாக பொடிக்கப்பட்ட மிளகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
உணவை அலங்கரிக்க சிறிது கொத்தமல்லி
செய்முறை :
1) ஒரு நான்ஸ்டிக் வாணலியில் 2-3 தேக்கரண்டி எண்ணையை ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.
2) பின்பு அத்துடன் இஞ்சி பூண்டு விழுதை கலந்து நன்கு வதக்கவும்.
3) அதன் பச்சை வாடை நீங்கிய பின், காளான் மற்றும் குடமிளகாய் சேர்க்கவும்.
4) இந்த கலவை நன்கு வதங்கிய பின், உப்பு,மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லி தூளை சேர்க்கவும்.
5) பின்பு ,கை அளவு தண்ணீரை தெளித்து, பாத்திரத்தை மூடிவிட்டு 5 நிமிடங்கள் மெல்லிய தீயில் சமைக்கவும்.
6) இப்போது, மூடியை திறந்து, தண்ணீர் முழுவதும் வற்றும் வரை சமைக்கவும்.
7) இதனுடன், மிளகு தூளை சேர்த்து, சிறிது சிறிதாக மீதமுள்ள எண்ணையை ஊற்றி மெல்லிய தீயில் நன்கு வறுக்கவும்.
8) பொன் நிறமாக வறுபட்டவுடன், இதை கொத்தமல்லி தூவி அலங்கரிக்க பட்ட சாதத்துடன் சூடாக பரிமாறவும்.
வாழைக்காயில் இதோ ஒரு ரெசிபி…
நேந்திரங்காய் சிப்ஸ்
தேவையானவை:
நேந்திரங்காய் – 2
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையானது
தேங்காய் எண்ணெய் – பொரிக்கத் தேவையானது
செய்முறை:
நேந்திரங்காய்களை வாழைப்பழம் உரிப்பது போல் உரித்து தோலை நீக்குங்கள். மஞ்சள்தூள், உப்பை கால் கப் தண்ணீரில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து நேந்திரங்காய்களை நேரடியாக எண்ணெயில் சீவி விடுங்கள். நன்கு வெந்து எடுக்கும் சமயம் உப்பு, மஞ்சள்தூள் கலந்த நீரை சிறிது எண்ணெயில் தெளித்து, படபடவென்று பொரிந்து அடங்கியதும் சிப்ஸை எண்ணெயிலிருந்து வடித்தெடுங்கள்.
அவல் தோசை தேங்காய் சட்னி
தேவையானவை: அவல் 200 கிராம், அரிசி 100 கிராம், உப்பு தேவையான அளவு, கடுகு, இஞ்சி துருவல் சிறிது, மிளகாய் 1.
செய்முறை: அவல், அரிசியை ஒரு மணி நேரம் தனித்தனியே ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவுடன் உப்பு சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி போட்டுத் தாளித்துக் கொட்டி கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மிதமான வெப்பத்தில் தோசைகளைச் சுட்டெடுக்கவும்.
தேங்காய் சட்னி: ஒரு கப் தேங்காய்த் துருவலுடன், 1 பச்சை மிளகாய், 4 டீஸ்பூன் பொட்டுக்கடலை, உப்பு சேர்த்துத் தண்ணீர் விட்டு அரைக்கவும். அவல் தோசைக்கு அருமையான சைடுடிஷ்.
ஆலு சப்பாத்தி கொத்தமல்லி சட்னி
தேவையானவை: கோதுமை மாவு 200 கிராம், வெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, சிறிய உருளைக்கிழங்கு 3, மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவிட்டு தோல் உரித்து நன்றாக மசிக்கவும். இதில், கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, வெண்ணெய், மிளகாய்த்தூள் சேர்த்துத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். இதைச் சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு சுட்டெடுக்கவும்.
கொத்தமல்லி சட்னி: கொத்தமல்லி, பச்சைமிளகாய், உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து, கடுகு தாளித்துக் கலக்கவும்
மிக்சர்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
கடலை மாவு 4 கப்
அரிசி மாவு 1 கப்
பெருங்காயம் 6 சிட்டிகை
மிளகாய்த் தூள்கால் டேபிள் ஸ்பூன்
மிளகுப் பொடி 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 2 கொத்து (பொரித்தது)
உலர்ந்த திராட்சை 15
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய்தேவைக்கேற்ப
வேர்க்கடலை கால் கப்
முந்திரி 15
பொட்டுக்கடலை கால் கப்
செய்முறை :
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயம் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.
சூடான எண்ணெய்க்கு நேராக காராசேவு தட்டைப் பிடித்து, பிசைந்த மாவை அந்தத் தட்டில் ஊற்றித் தேய்க்கவும்.
எண்ணெயில் விழுந்த காராசேவு வெந்ததும், எடுக்கவும். அதே மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து பூந்திக் கரண்டியில் ஊற்றித் தேய்த்து, பூந்தியாகப் பொரித்தெடுக்கவும்.
இன்னொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வேர்க்கடலை, பொட்டுக்கடலை, முந்திரி, பாதாம் ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் காராசேவு, பூந்தி, வறுத்த பருப்புகள் ஆகியவற்றைச் சேர்க்கவும். இவை சூடாக இருக்கும்போதே மிளகாய்த் தூள், மிளகுத் தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும்.
தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்து, காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வவெங்காயம்
வெங்காயம் தக்காளி தொக்கு
இட்லி மற்றும் தோசைக்கான ஒரு சுவையான சைட் டிஷ்.
*Onion Tomato Thokku*
தேவையான பொருட்கள்
வெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது)
தக்காளி – இரண்டு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – ஒரு தேகரண்டி
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
பூண்டு – ஆறு (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பில்லை – சிறிதளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.
பிறகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும். காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பில்லை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
பின், பெருங்காயம், தண்ணீர் சிறிதளவு சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
தொக்கு போல் வந்தவுடன் இறக்கி இட்லி, தோசை, நீர் தோசைவுடன் பரிமாறலாம்.
புடலங்காய் கூட்டு
மதியம் என்ன சமைப்பது என்றே தெரியவில்லையா? உங்கள் வீட்டில் புடலங்காய் உள்ளதா? அப்படியெனில் அதனைக் கொண்டு கூட்டு செய்யுங்கள். இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட. அதுமட்டுமின்றி, பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்.
சரி, இப்போது அந்த புடலங்காய் கூட்டு எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
புடலங்காய் - 2 கப் (நறுக்கியது)
துவரம் பருப்பு - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் புடலங்காயை உப்பு கொண்டு நன்கு தேய்த்து, நீரில் கழுவி, பின் அதனை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி மத்து கொண்டு மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறி மற்றும் தண்ணீர் சேர்த்து, காய்கறி நன்கு மென்மையாக வேகும் வரை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.
காய்கறியானது நன்கு வெந்ததும், அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, பின் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
அதற்குள் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் காய்கறியில் இருந்து பச்சை வாசனை போய்விட்டால், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து 3-5 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். ஒருவேளை கூட்டு மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, கூட்டுடன் சேர்த்தால், புடலங்காய் கூட்டு ரெடி!!!
[1/7,காசி அல்வா.. செய்வது எப்படி??*
*தேவையானவை:*
முற்றிய வெள்ளைப் பூசணி (துருவியது) - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப், வறுத்த முந்திரி, திராட்சை தலா - 25 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, நெய் - 100 கிராம், வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்.
*செய்முறை:*
பூசணித் துருவலை பிழிந்து நீரை நீக்கவும். அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய்யை சூடாக்கி, பூசணித் துருவலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து காய் வேகும்போது நெய் சேர்த்துக் கிளறவும். சற்றே தளர இருக்கும்போது ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறி, அல்வா பதம் வரும்போது இறக்கவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து, வறுத்த முந்திரி - திராட்சை, வெள்ளரி விதை தூவி அலங்கரித்து ப
ஓமப் பொடி
வேண்டியவைகள்.
சலித்த கடலைமாவு—–ஒருகப்
சலித்த அரிசி மாவு——கால்கப்
வெண்ணெய்—-ஒரு டேபிள் ஸ்பூன், சற்றே உறுக்கியது
எண்ணெய்—–ஒரு ஸ்பூன், நன்றாக சூடாக்கியது
ருசிக்கு உப்பு—-வேண்டிய அளவு
ஓமம்—-ஒரு டீஸ்பூன், பொடித்து சிறிது ஜலத்தில் கறைத்து வடிக்கட்டவும்.
ஓம்ப் பொடி, பொறிப்பதற்கு—–வேண்டிய எண்ணெய்
செய்முறை.
இரண்டு மாவுகளுடன்,எண்ணெய், வெண்ணெய், உப்பு ப் பொடி கலக்கவும்.
வடிக்கட்டிய ஓம ஜலத்தைவிட்டு மேலும் வேண்டிய ஜலம்
விட்டு மாவை மிருதுவாகப் பிசையவும்.
ஓமப்பொடி அச்சில் எண்ணெயைத் தடவவும்.
மாவு சற்று சுலபமாக பிழியும் அளவிற்கு தளர்வாக
இருந்தால்தான் பிழிவதற்கு சுலபமாக இருக்கும்.
இதற்காகவே ஒரு ஸ்பூன் காயும் எண்ணெயை மாவில்
அதிகமாக விடவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து ,,பிசைந்த மாவை
அச்சிலிட்டு, நெறுக்கமான வட்ட மாக மா வைப் பிழியவும்.
வேகும் சலசல ஓசை அடங்கும் போது திருப்பிவிட்டு கரகரப்பான
பதத்தில் அக்கரையுடன் எடுத்து வடிக்கட்டியில் டிஷ்யூ பேப்பர்
வைத்து வடிக்கட்டி, எடுத்து வைக்கவும். மிகுதி மாவையும்
இப்படியே செய்து எடுக்கவும்.
அதிகம் செய்வதானாலும், மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகவே
பிசைந்து செய்வது நல்லது.
கலராக இருக்க வேண்டுமானால் துளி மஞ்சள் கேஸரி பவுடர்,
விருப்பமானால் சேர்க்கலாம். ஓமப் பொடி ரெடி, சொல்வது
ஓம்ப் பொடிதானே_?
காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வைக்கவும்
கொழுப்பை வற்றவைத்து, உடல் எடையை குறைக்கும் பட்டை இஞ்சி டீ!
உடம்பை குறைக்கும் முயற்சியில் இறங்கி, பலவற்றை முயற்சித்து தோல்வியில் தொவண்டு போனவர்கள் பலர். அப்படி எடையை குறைக்க நீங்கள் முயற்சிப்பவரானால், பட்டை இஞ்சி டீயில் தேன் கலந்தது குடியுங்கள். கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை தேன், பட்டை, இஞ்சியில் உள்ளது. அதனால் தான் அசைவ உணவுகளுக்கு பட்டை சேர்கின்றனர், இது மேலும் ஜீரண சக்தியை துண்டுகிறது. இஞ்சி மற்றும் பட்டை உடல் எடையை விரைவில் குறைக்கும் மேலும் உடல் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இருக்கும். இங்கு எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி டீயை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து காலையில் செய்து குடித்து வாருங்கள் விரைவில் உடலில் மாற்றம் ஏற்படும்.
தேவையான பொருட்கள்
பட்டை – 2
இஞ்சி – சிறிய துண்டு
ப்ளாக் டீ இலைகள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை – 2 துண்டுகள்
புதினா – 5-6 இலைகள்
தேன் – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும். பின்பு டீ இலைகளை சேர்த்து, அடுப்பை அணைத்து, 3-4 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் சேர்த்து கலந்து குடிங்க
குலாப் ஜாமுன்
செய்முறை.
தேவையான பொருட்கள்
பால் – தேவைக்கேற்ப
சர்க்கரை - 2 கப்
பால் பவுடர் - 1 கப்
மைதா - 1 / 2 கப்
சமையல் சோடா – 1 / 2 தேக்கரண்டி
உருக்கிய வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
சர்க்கரை பாகு செய்வதற்கு
தண்ணீர் - 1 கப்
ஏலக்காய் - 2
செய்முறை
சர்க்கரை பாகு
மேலே கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து சர்க்கரை நன்றாக தண்ணீரில் கரையும் வரை சூடு செய்யவும்.
ஜாமுன்
ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், மைதா, சமையல் சோடா, வெண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்
.
இதில் தேவையான அளவு பால் ஊற்றி லூசாக பிசைந்து கொள்ளவும்.பிசைந்த உருண்டையை சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.
உருண்டையை 18 – 20 பாகங்களாகப் பிரித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சூடு செய்யவும்.
எண்ணெய் சூடானதும் அதில் உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.குலாப் ஜாமுன் மெதுவாக அடியிலிருந்து மேலே வர வேண்டும்.
பொன்னிறமானதும் மெதுவாக வெளியே எடுத்து மிதமான சூட்டில் இருக்கும் சர்க்கரைப் பாகில் போடவும்.
குலாப் ஜாமுனை 30 நிமிடங்கள் சர்க்கரைப் பாகிலையே விட்டு விடவும்.பிறகு எடுத்து பரிமாறலாம்.
நம் வீட்டு சமையல்
செட்டிநாடு முட்டை குழம்பு
சுவையான செட்டிநாடு முட்டை குழம்பு செய்வதற்கான சமையல் குறிப்பு.
தேவையான பொருட்கள்:
முட்டை – 5
அரைக்க:
சின்ன வெங்காயம் – 10 (அல்லது) பெரிய வெங்காயம் – 1
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 7
வர கொத்தமல்லி – 3 தேக்கரண்டி
சீரகம் – 1 1 /2 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
வரமிளகாய் – 2
வெந்தயம் – 1 /2 தேக்கரண்டி
கருவேப்பிலை – 1 கொத்து
பட்டை – 2
கிராம்பு – 2
சோம்பு – 1 /2 தேக்கரண்டி
தேங்காய் – 4 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு – 1 /2 தேக்கரண்டி
தக்காளி – 1 /2
செய்முறை:
முட்டையை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் ஊற்றாமல் தனித்தனியாக லேசாக வறுத்துக் கொள்ளவும்.
வெங்காயம்,இஞ்சி,பூண்டு முதலியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கிக் கொள்ளவும்.
வதக்கிய பொருட்கள் அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை தாளித்து , தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் அரைத்த மசாலா, உப்பு போட்டு வதக்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
தேங்காயை அரைத்துக் கொள்ளவும். அரைத்த தேங்காய் ஊற்றி 2 நிமிடங்கள் வேக விடவும்.
பின் முட்டைகளை இரண்டு பக்கமும் லேசாகக் கீறி குழம்பில் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவ
தீபாவளி ஸ்பெஷல் தட்டை வடை
தீபாவளிக்கு செய்யப்படும் பலகாரங்களில் காரவகை பலகாரங்கள் செய்து சாப்பிட்டு கொண்டாடுவது என்பது வழக்கத்தில் உள்ள ஒன்று. அதுவும் தீபாவளி பண்டிகையின் போது செய்யப்படும் ஸ்பெஷல் கார வகைகளில் ஒன்றான தட்டை வடையை வீட்டில் எளிமையாக, ருசியாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள் :
அரிசி மாவு - 5 கப்
உளுத்தம் பருப்பு மாவு - 2 கப்
மிளகாய் தூள் - 1ஃ4 டீஸ்பு+ன்
கடலைப் பருப்பு - 2 கப்
கறிவேப்பிலை - 10 இலைகள்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - 1ஃ2 டீஸ்பு+ன்
வெண்ணெய் - 8 டேபிள் ஸ்பு+ன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
🍪 தட்டை வடை செய்வதற்கு முதலில் கடலைப் பருப்பை தண்ணீரில் 2 மணிநேரம் ஊற வைத்து, நன்கு கழுவி காய வைக்கவும். ஒரு வாணலியில் அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, மிளகாய் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு நன்கு கலந்து, அதில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி, ஓரளவு கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சிறு தட்டைகளாக தட்டி, அனைத்தையும் ஒரு துணியில் ஒவ்வொன்றாக வைத்து அரைமணி நேரம் காய வைக்கவும். பிறகு ஒரு ஊசியால் தட்டையில் அங்கங்கு சில இடங்களில் குத்தி விடவும். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சு+டானதும், அதில் தட்டி காயவைத்துள்ள தட்டைகளை போட்டு பொன்னிறமாக இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான தட்டை வடை ரெடி.
சிக்கன் காரைக்குடி
தேவையான பொருட்கள்_
சிக்கன் – அரை கிலோ (சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கவும்)
காய்ந்த மிளகாய் – 1௦
வெங்காயம் – 1௦௦ கிராம் (நறுக்கியது)
பூண்டு – நான்கு பல்
இஞ்சி – சிறுதுண்டு
மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
_செய்முறை_
1.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை முக்கால்பதமாக வதக்கவும்.
2.காய்ந்த மிளகாயில் விதையை எடுத்துவிட்டு அதையும் சேர்த்து வதக்கவும்.
3.பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் சிக்கன் சேர்த்து நீரை தெளித்து வதக்கவும்.
5.சிக்கன் நன்கு வெந்ததும், தேவையான அளவு உப்பு, மிளகு தூள் துவி இறக்கி வைக்கவும்.
6.இந்த காரைக்குடி சிக்கன் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்
பூரி-உணவகத்தைப்போலவே செய்யும் முறை
தேவையான பொருட்கள்:
========================
கோதுமை மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்+ஒரு டீஸ்பூன்
சீரக பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு சிட்டிகை
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு.
வெதுவெதுப்பான நீர் - மாவு பிசைவதற்கு.
செய்முறை:
============
* கோதுமை மாவையும்,மைதாவையும் ஒன்றாக கலந்து சீரக பொடி,உப்பு,சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
* நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதம் போல் பிசையவும்.
* பிசைந்த மாவில் எல்லா பகுதிகளிலும் எண்ணெய்(ஒரு டேபிள்ஸ்பூன்) படுமாறு தடவவும்.
* ஒரு ஈர துணி வைத்து மூடி கால் மணி நேரம் வைக்கவும்.
* எண்ணையை கடாயில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
* மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தேய்க்கவும்.(மாவு சமமாக இருக்க வேண்டும்)
* எண்ணெய் நன்றாக சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரியை போட்டு லேசாக கரண்டியால் பூரி ஓரங்களில் அழுத்தவும்.
* இப்படி செய்வதால் உணவகத்தில் தரும் பூரியை போல puff ஆக உதவும்.
* ஒரு பக்கம் லேசாக சிவந்ததும் ஓரத்திலிருந்து மறுபக்கம் திருப்பவும்.
* இரு பக்கங்களும் சிவந்ததும் பேப்பர் டவலில் சிறிது நேரம் வைத்து பரிமாறவும்.
* சுவையான பூரி தயார்.
இந்தபூரி கடைசிவரை அதுவே அமுங்காது.
பூரி மசால் செய்யும் முறை:-
முதலில் தேவையான பொருட்கள்.
உருளைக்கிழங்கு - 4 - 5 பெரிய கிழங்குகள்
வெங்காயம் - 2 - 3 மீடியம் சைஸ்
பச்சை மிளகாய் - 3 - 4
இஞ்சி - ஒரு இன்ச் சைசுக்கு ஒரு துண்டு.
கொத்து மஞ்சள் - ஒரு விரற்கிடை
தாளிக்கத் தேவையான பொருட்கள் (கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு)
தணியாப் பொடி (மல்லிப் பொடி) - சிறிதளவு
கொத்தமல்லித் தழை, கருவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:-
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி சற்று சிறிய அளவில் நசுக்கியோ, நறுக்கியோ வைத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயத்தை நீள வாக்கில் சின்னதாக அரிந்து வைத்துக் கொள்ளுங்கள்
பச்சை மிளகாயை நீளவாக்கில் 'ஸ்லிட்' செய்து வைத்துக் கொள்ளுங்கள்
இஞ்சியை இரண்டு மூன்றாக அரிந்து, நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
கொத்து மஞ்சள் கிடைத்தால் அதை நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணையைத் தாராளமாக ஊற்ற வேண்டும். எண்ணை காய்ந்த உடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு என்ற வரிசையில் போட்டு கடுகு வெடிக்கும் வரையும், பருப்புகள் சிவக்கும் வரையும் அதை துடுப்பால் தள்ளிக் கொண்டே இருங்கள். பிறகு பச்சை மிளகாயைச் சேருங்கள். அடுத்து இஞ்சியையும், மஞ்சளையும் சேர்க்க வேண்டும்.
இவை வதங்கும் போது வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இப்போது உப்பு சேர்க்கவும். இவை வதங்கும் போது உருளைக் கிழங்கைச் சேர்த்து ஒன்றாகக் கிளரி அதன் மேல் தணியாத் தூளைத் தூவி நன்றாக வதக்க வேண்டும்.
இவையனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். சற்று இளகிய பதம் வரும் போது அதன் மேல் மல்லித் தழையும், கருவேப்பிலையையும் கிள்ளிப்போட்டு இறக்கி விடுங்கள்.
இப்போது சுவையான கிழங்கு தயார்!!!
கொத்து மஞ்சள் கிடைக்க வில்லையென்றால் மஞ்சள் தூளை வெங்காயம் வதங்கும் போது மஞ்சள் தூளைச் சேர்க்கலாம்.
இந்தக் காம்பினேஷனுக்கு இணையான டிஃபன் உலகத்திலேயே இல்லை.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா
ஒரு கண்ணோட்டம் &
செய்முறை...
அன்பை எத்தனை வழிகளில் சொல்லலாம்? பூக்கள் கொடுத்து சொல்லலாம். கடிதம் எழுதி சொல்லலாம். எதையேனும் பரிசாக அளித்தும் சொல்லலாம். இவை எல்லாவற்றையும் விட அன்பை சுவையாகச் சொல்ல அழகான ஒரு வழி சொல்லித் தருகிறார்கள் கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தினர். அது... அவர்களின் சிறந்த படைப்பான மைசூர்பா - குறித்துக் கொள்ளுங்கள் மைசூர்பாக் அல்ல - மைசூர்பா!
வாயில் இட்டதும் கரைந்து நேராக வயிற்றுக்குள் செல்லும் மிருதுவான மைசூர்பாவை விரும்பாதவர் யாரேனும் உண்டோ? வழக்கமான மைசூர்பாகு என்பது ‘கொஞ்சம் குருணை கொஞ்சம் கடினம்’ என்பதாக இருக்கும். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, நெய் மணக்கும் மிக மிருதுவான, நாவிலே கரையும் தன்மையுடன் இவர்கள் செய்யும் மைசூர்பா... உண்மையில் வேறு எங்கும் கிடைக்காததுதான்!
இந்திய இனிப்பு வகைகளில் உலக அளவில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா. இது கடந்து வந்த பாதையும் இதன் பாரம்பரியத்தை போன்றே நீண்ட நெடியது. ‘அமுதச்செம்மல்’ என்.கே.மகாதேவ ஐயரால் 1948ல் தொடங்கப்பட்ட இந்தச் சுவைத் தொழிற்சாலை, 65 ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது.
இப்போது மூன்றாவது தலை முறையாக பேத்தி ஹரிதா கிருஷ்ணன் தலைமையில் 1,500 நேரடி பணியாளர்களையும் நூற்றுக்கணக்கான மறைமுகப் பணியாளர்களையும் கொண்ட பெரிய கார்பரேட் நிறுவனமாக விரிந்து பரந்து உள்ளது எஸ்.கே.எஸ். எம்.பி.ஏ. பட்டதாரியான ஹரிதா, சிறுவயதிலிருந்தே டாக்டர், வக்கீல், ஆர்க்கிடெக்ட் போன்றவற்றில் ஈர்ப்பு இல்லாமல், குடும்பத் தொழிலில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று ஆர்வம் காட்டியவர். 2 ஆண்டுகளாக தலைமைப் பொறுப்புக்கான பரபர பயிற்சியில் இருக்கிறார்.
தாத்தா காலத்தின் பாரம்பரியங்களைக் கைவிடாமல் - அதே பொழுதில் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டும் ஏராளமான புது யுக்திகளை கொண்டு வரப்போவதாக மகிழ்ச்சியுடன் சொல்கிறார் ஹரிதா. அதே நேரம் கிருஷ்ணா ஸ்வீட்ஸின் ருசியில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் உறுதி கூறுகிறார்.
‘‘ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை சோடா உப்பு, டால்டா போன்ற வயிற்றைக் கெடுக்கும் பொருட்களும் செயற்கை வர்ணங்களும் இங்கு தயாராகும் உணவுவகைகளில் கலக்கப்படு வதில்லை. மக்கள் தரும் பணத்துக்கு ஏற்ற தரமான உணவை பொய், ஏமாற்றல் இன்றி தர்மத்தின் வழியில் வியாபாரம் செய்ய வேண்டும் என்பதே மகாதேவ ஐயரின் தாரக மந்திரமாக இருந்தது. அதையே என்றும் வழிமொழிவோம்’’ என்கிற ஹரிதாவிடம், நம் வழக்கமான கேள்வியையே தாமதம் செய்யாமல் கேட்டோம்...
இத்தனை புகழ்பெற்ற அந்த மைசூர்பாவில் என்ன வசியம் செய்கிறீர்கள்? பதிலே பேசாமல், நேராக அவர்களின் மெயின் கிச்சனுக்கு அழைத்துச் சென்றார் ஹரிதா. 280க்கும் அதிக வகை இனிப்புகள், 70க்கும் மேற்பட்ட கார வகைகள் அனைத்தும் தயாராகும் மிகப்பெரிய கிச்சன்... நெய் மணமும் கலவையான இனிப்பு வாசனையுமாக அந்த ஏரியாவையே மணக்க வைக்கிறது, சுத்தமும் காற்றோட்டமும் கொண்ட அந்த அடுக்களை. ‘‘செய்தே காட்டுகிறோம்...
நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்... எந்த ரகசியமும் இதில் இல்லை. எங்கள் வாடிக்கையாளர்களைப் போலவே நாங்கள் கொள்முதல் செய்யும் வியாபார நண்பர்களும் பாரம்பரியமானவர்கள். மூன்றாவது தலைமுறையாக ஒரே இடத்தில் இருந்துதான் நெய் வாங்குகிறோம்’’ என்றார் ஹரிதா. 20 நிமிடங்களில் ஒரு கிலோ கடலைமாவு கொண்டு 7 கிலோ மைசூர்பா நம் கண் முன்னே தயாரானது. உண்மைதான்... அதில் வேறு எந்த ரகசியமும் இல்லை... பதம், நேரம், பொருட்களின் தரம் மற்றும் சரியான விகித கலவைதான் மைசூர் பாவில் முக்கியம்!
நம் வீடுகளில், தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் ஒரு வாரம் முன்பே மைசூர்பா கிளறத் தொடங்கி விடுவோமே... மொறுமொறுப்பாகக் கிண்டி தாம்பாளத்தில் கொட்டும்போதே அழகாக இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் அத்தனை மெனக்கிடுவதில்லை பலரும். ‘சாதாரண சாம்பார் ரசமே தினம் ஒரு சுவையில் வரும்போது இனிப்பு - அதுவும் மைசூர்பாவை வீட்டில் செய்வது சிரமம்தான். இருக்கவே இருக்கிறது ரெடிமேட் ஜாமூன் மிக்ஸ்... அரை மணி நேரத்தில் தீபாவளி இனிப்பை நாமே செய்து முடித்து, மீதியை கடையில் வாங்கிக் கொண்டாட லாமே’ என்ற மனநிலைதான் இப்போது பெரும்பாலும் இருக்கிறது. கொஞ்சம் பொறுமையும் நிறைய ஆர்வமும் இருந்தால் போதும்... மைசூர்பா நாமே செய்து விடலாமே! ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் இருந்து விடைபெற்று வந்ததும் இதுதான் தோன்றியது!
நம் கண் முன் செய்து காட்டிய இனிப்பை அதே பதம், சுவையோடு வர வைக்க நிறைய முறை செய்ய வேண்டியதாயிற்று. பாகு பதம் கொஞ்சம் தவறிய போது மைசூர்பா ‘பர்பி’ ஆனது. அடுத்த முறை வேகாமல் ‘அல்வா’ பதத்துக்கு போனது. நெய்க்குப் பதில் அல்லது நெய்யும் வேறு டால்டா அல்லது எண்ணெய் என்று முயற்சி செய்த போது ஓரளவு நல்ல ரிசல்ட் வந்தது. ஆனாலும், நமக்குத் தேவை பர்ஃபெக்ட்டான மைசூர்பா தானே? மீண்டும் அவர்கள் செய்த அனைத்தையும் நினைவுபடுத்தி ஒவ்வொரு தவறையும் சரி செய்து பல முறை செய்து பார்த்ததில் ஒருவழியாக வாயில் போட்டதும் கரையும் மனம் இனிக்கும் மைசூர்பா வந்தே விட்டது!
கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்!
அளவு மிக முக்கியம்...
நெய் மட்டுமே ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் சேர்க்கிறார்கள். நமக்கு அவ்வளவு நெய் தேவையில்லை என்றால் மூன்றில் ஒரு பங்கு சன் ஃப்ளவர் ஆயில் சேர்க்கலாம். அதே சாஃப்ட்டான பதம் வரும்.
பாகு அளவும் பதமும் தவற விடக்கூடாதது. தண்ணீரில் சர்க்கரை கலந்ததும், அதனை வடிகட்டி, மீண்டும் பாகு செய்ய வைத்தல் நலம். இதனால் சர்க்கரையில் இருக்கும் தூசு, கசடுகளைக் கழிக்கலாம்.
முதலில் பிசுபிசுப்பான பாகு, பின் கால் கம்பி, அரைக்கம்பி, அடுத்து ஒரு கம்பி பதம் வரும். இதுவே சரியான மைசூர்பா பதம்.
கொட்டிக் கிளறும் போது அதனை சிறிது ஆறவிடுதலும், கீழ் இறக்கி வைத்து கிளறி, மீண்டும் கொஞ்சம் நெய்விடுதலும் அவசியம்.
எந்தக் கப்பில் மாவை எடுக்கிறீர்களோ அதே கப்பில் சர்க்கரை, நெய் எடுப்பது கொஞ்சம் எளிதானது.
அது என்ன மைசூர்பா பதம்?
ஸ்டேஜ் 1: கடலை மாவை நன்கு பாகுடன் கிளறவும்.
ஸ்டேஜ் 2: கடலை மாவு பாகு + நெய்யுடன் சேர்ந்து வேக ஆரம்பிக்கும், ஊற்றும் நெய் அனைத்தையும் உறிஞ்சும்.
ஸ்டேஜ் 3: லேசாக ஓரங்களில் நுரைக்கும்... கொதி வரும்.
ஸ்டேஜ் 4: கலர் மாறி லேசாக வெள்ளையாகவும் ஓரங்களில் நன்கு நுரைத்தும் வரும்.
ஸ்டேஜ் 5: இப்படி கலர் மாறியதும் பால் பொங்குவது போல லேசாக பொங்கி வரும். இதுதான் மைசூர்பா பதம். இப்போது இறக்கி வைத்து கைவிடாமல் அந்த பாத்திர சூட்டில் 5 நிமிடம் கிளறவும்.
ஸ்டேஜ் 6: கிளறுவதை நிறுத்தி, நெய் விட்டு ஒரு நிமிடம் அப்படியே விடவும். பின் மீண்டும் 2 நிமிடம் கிளறி ட்ரேக்கு மாற்றவும்.
சீக்ரெட் ரெசிபி மைசூர்பா
என்னென்ன தேவை?
கடலை மாவு - ஒரு கப்,
சர்க்கரை - மூன்று கப் (அதிகம் இனிப்பு வேண்டாதவர்கள் இரண்டரை கப் வைக்கலாம்),
நெய் - 3 கப்.
எப்படிச் செய்வது?
அடிகனமான கடாய் (அல்லது பிரஷர் பேன் கூட ஓ.கே.) சர்க்கரையை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு சூடாக்கவும். ஒரு சதுரமான ட்ரேயில் நெய் தடவி எடுத்து அருகில் வைக்கவும். கடலை மாவை சலித்துக் கொள்ளவும். சர்க்கரை கரைந்ததும் வடிகட்டியில் வடித்து மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும். ஒரு கம்பி பதம் வந்ததும், அடுப்பை குறைத்து கடலை மாவை கொட்டி, கைவிடாமல் கிளறவும். 3 கப் நெய்யில் கால் கப் தவிர மீதத்தை சிறிது சிறிதாக ஊற்றி விடாமல் கிளறவும். இப்போது அடுப்பை நிதானமாக எரிய விட வேண்டும்.
ஒட்டாமல் மைசூர்பா பதம் வந்ததும் அடுப்பி லிருந்து இறக்கி கீழே வைத்து, மீண்டும் 5 நிமிடம் கிளறவும். இந்த ஸ்டேஜில், ஒரு நிமிடம் கிளறுவதை நிறுத்தி, மீதமிருக்கும் நெய்யை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் நன்கு கிளறி ட்ரேயில் கொட்டவும். சிறிது நேரம் ஆறவிட்டு, விரும்பிய அளவில் துண்டு போடவும்.
மட்டன் சுக்கா
எப்போதும் மட்டனை குழம்பு, வறுவல் என்று செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியெனில் உங்களுக்காக தமிழ் போல்ட் ஸ்கை தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான, அதே சமயம் காரசாரமாக இருக்கும் ஒரு மட்டன் ரெசிபியைக் கொடுத்துள்ளது. அந்த ரெசிபியின் பெயர் மட்டன் சுக்கா. இந்த மட்டன் சுக்காவானது சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
உங்களுக்கு அந்த மட்டன் சுக்காவை எப்படி செய்வதென்று தெரியாவிட்டால், இங்கு அதன் செய்முறையும் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத மட்டன் - 1 கிலோ
வெங்காயம் - 5 (நறுக்கியது)
தக்காளி - 4 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 4
மிளகு - 2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மட்டன் நன்கு நீரில் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை குக்கரில் போட்டு, 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, 6-7 விசில் விட்டு இறக்கி கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, சோம்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, சீரகம் மற்றும் மல்லி சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலா பொடியில் பாதியை சேர்த்து, அத்துடன் தக்காளியை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
பின்னர் குக்கரில் உள்ள மட்டன் துண்டுகளை வாணலியில் சேர்த்து, குக்கரில் உள்ள மட்டன் நீரில் பாதியை ஊற்றி, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இறுதியில் மீதமுள்ள மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், காரசாரமான மட்டன் சுக்கா ரெடி!!!
பன்னீர் வெஜிடபிள் பிரியாணி செய்முறை விளக்கம்
சுவையான பன்னீர் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பன்னீர் வெஜிடபிள் பிரியாணி செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 1 கப்
கெட்டித் தயிர் - 1 கப்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 4
பன்னீர் - 150 கிராம்
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 2
இஞ்சி விழுது - 1/2 ஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
தக்காளி - 2
பீன்ஸ் - 8
கேரட் - 1
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
காலிபிளவர் - 8 சிறிய பூக்கள்
வறுத்து அரைக்க :
கிராம்பு - 2
பட்டை - 1 சிறிய துண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காயத் துருவல் - 6 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
பச்சை மிளகாய் - 2
செய்முறை :
* பாசுமதி அரிசியைக் களைந்து 1 கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
* கடாயில் சிறிது நெய் ஊற்ற அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் தேங்காய் துருவல் நீங்கலாக வறுத்து ஆறவைத்து மிக்சியில் அரைக்கும் போது தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
* காய்கறிகள், கொத்தமல்லி, புதினா, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பன்னீரை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
* ஒரு குக்கரில் மீதியுள்ள நெய் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயத் போட்டு வதக்கிய பின் இஞ்சி பூண்டு போட்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கிய பின்னர் அரைத்த விழுதுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
* வதக்கிய கலவையில் இருந்து நெய் பிரிந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா, காய்கறிகள், காலிபிளவர், சிறு துண்டுகளாக நறுக்கிய பன்னீர் சேர்த்து சிறிது வதக்கவும்.
* தண்ணீருடன் ஊறிய பாசுமதி அரிசி, தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 2 விசில் விட்டு சிம்மில் 5 நிமிடம் வைத்து அணைக்கவும்.
* விசில் போனவுடன் திறந்து பரிமாறவும்.
* சுவையான பன்னீர் வெஜிடபிள் பிரியாணி ரெடி.
*பன்னீர் பட்டர் மசாலா (PANEER BUTTER MASALA - PUNJABI STYLE)
பன்னீர் பட்டர் மசாலா
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 5
தக்காளி - 3
இஞ்சி [1துண்டு] பூண்டு [10 பல்] பச்சை மிளகாய் [3] இவை மூன்றையும் அரைத்துக் கொள்ளவும்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தனியத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள்ஸ்பூன்
கிச்சன்கிங் மசாலா - 2 டேபிள்ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - 1 டேபிள்ஸ்பூன்
சக்கரை - 1/2 ஸ்பூன்
ஃபிரஸ் கிரீம் - 3 டேபிள்ஸ்பூன்
வெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
ஸ்டெப் : 1
பேனில் வெண்ணை , எண்ணை விட்டு அதில் அரைத்த இஞ்சி பூண்டு விழுது போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் தக்காளி விழுது போட்டு மீண்டும் 5 நிமிடம் வதக்கி அதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாத்தூள், உப்பு, கரம் மசாலா, கிச்சன்கிங் மசாலா,கஸ்தூரி மேத்தி, சக்கரை இவை அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கிய பிறகு அடுப்பை அனைத்து ஆறவிடவும்.பிறகு இந்த மசாலாவை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
ஸ்டெப் : 2
அடுப்பில் பேனை வைத்து அதில் அரைத்த மசாலாவை போட்டு ஒரு கொதிவிடவும்.[மசாலா தீக் ஆக இருந்தல் கொஞ்சமாக தண்ணீர் விடவும்]
பிறகு அதில் 3 டேபிள்ஸ்பூன் ஃபிரஸ் கிரீம் , கட் செய்த பன்னீர் துண்டுகள் , வெண்ணை 1/2 ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து தீயை குறைத்து மூடி வைக்கவும். பிறகு 5-6 நிமிடம் ஆன பிறகு மூடியை திறந்து அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலை தூவி இறக்கவும்.
இதை நாண், சப்பாத்திவுடன் பாரிமறவும்
புதுவிதமன சுவையில் இருக்கும் இந்த பன்னீர் பட்டர் மசாலா.
வெந்தயக் குழம்பு
தேவையான பொருட்கள்
சிறிய வெங்காயம் – 20
பூண்டு – 6 பற்கள்
மிளகாய் வற்றல் – 5
சீரகம் – 3 தேக்கரண்டி
வெந்தயம் – 2 தேக்கரண்டி
மல்லி – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி – அரைத் தேக்கரண்டி
கடுகு – அரைத் தேக்கரண்டி
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை உரித்து நறுக்கிக் கொள்ளவும். பூண்டினை தோல் உரித்துக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல், சீரகம், மல்லி ஆகியவற்றை ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும்.
புளியை சிறிது நீரில் ஊற வைத்து, சற்று நேரத்திற்கு பின் அதனைக் கரைத்து அதனுடன் அரைத்த மசாலாவினையும், மஞ்சள் பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் நுணுக்கிய வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டினைப் போட்டு வதக்கவும்.
பிறகு அதில் மசாலா கரைத்த புளித் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்து வற்றியவுடன் சிறு தீயில் சிறிது நேரம் வைத்திருந்து எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக