பிசிபேலா பாத்
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு 1 கப்
அரிசி 1 கப்
தண்ணீர் 6 கப்
சுடு தண்ணீர் 1 கப்
சின்ன வெங்காயம் 10 (பொடியாக நறுக்கியது)
பூண்டு பற்கள் 8 ( பொடியாக நறுக்கிய)
தேவையான அளவு உப்புத்தூள்
பச்சை மிளகாய் 4 ( பொடியாக நறுக்கியது)
வரமிளகாய் தூள் 3 தேக்கரண்டி ( பொடியாக நறுக்கிய)
காய்கறிகள்
பீன்ஸ் 10( பொடியாக நறுக்கிய)
கேரட் 1( பொடியாக நறுக்கிய)
முட்டை கோஸ் 1/4 கப்( பொடியாக நறுக்கிய)
கத்திரிக்காய் 8 ( பொடியாக நறுக்கிய)
முள்ளங்கி 2 ( பொடியாக நறுக்கிய)
பிசிபேலா பாத் பொடி
வரமிளகாய் 10
கறிவேப்பிலை 2 கொத்து
கொத்தமல்லி விதை 2 மேஜைக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 2 தேக்கரண்டி
கடுகு 1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு 2 மேஜைக்கரண்டி
உளுந்து பருப்பு 2 மேஜைக்கரண்டி
மராட்டிய மொக்கு 2
பட்டை 2 இன்ச்
கிராம்பு 4
மற்றவை
புளி எலுமிச்சம்பழ அளவு 1
பசு நெய் 4மேஜைக்கரண்டி
கடுகு 1/4 தேக்கரண்டி
பூண்டு 2 ( அம்மிகல்லில் நசுக்கியது)
சின்ன வெங்காயம் 2 ( அம்மிகல்லில் நசுக்கியது)
கறிவேப்பில்ல 1 கொத்து
செய்முறை
1. ஒரு வடசட்டியில் எண்ணெய் விடாமல் பிசிபேலா பாத் பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை நன்றாக ஆற வைத்து , மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
2. பிரஷர் குக்கரில் நன்றாக ஊறவைத்த அரிசியையும் பருப்பையும் , காய்கறிகள், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், போட்டு 7 கப் தண்ணீர் ஊற்றி , தேவையான அளவிலான உப்புத்தூள் , பொடியாக நறுக்கிய பூண்டையும் சேர்த்து நன்றாக 8 விசில் வரை விட்டுகோங்க நன்றாக குழைய குழைய வேக வைக்கவும்.
3. பிறகு அதில் சுடு தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறவும்.
4. புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து , பின் நன்றாக பிசிறி புளி கரைசலை எடுத்து கொள்ளவும்.
5. ஒரு வடச்சட்டியில் 2 மேஜைக்கரண்டி பசுநெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும், அதில் கறிவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கவும். அம்மிகல்லில் நசுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
6. பிறகு அதில் புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். அதில் 2 1/2 மேஜைக்கரண்டி பிசிபேலா பாத் பொடி போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அதில் 1 தேக்கரண்டி வரமிளகாய் தூள் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அதில் 1 கப் தண்ணீர் சேர்த்துகோங்க நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
7. இப்பொழுது இந்த வடசட்டியில் உள்ள கலவையை பிரஷர் குக்கரில் சேர்த்துகோங்க நன்றாக கிளறவும்.
8. அதில் மீதமுள்ள பசுநெய்யை ஊற்றி நன்றாக கிளறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக