செவ்வாய், 17 ஜனவரி, 2017

தேங்காய் அடை

தேங்காய் அடை

தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், பச்சரிசி - அரை கப், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் கப், பாசிப்பருப்பு - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 5, இஞ்சித் துருவல், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை ஊற வைத்து... சீரகம், இஞ்சி, தேங்காய், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து சற்று கொரகொரவென அரைக்கவும். பாசிப்பருப்பை ஊற வைத்து மாவுடன் கலந்து, தோசைக்கல்லை காய வைத்து, மாவை அடைகளாகத் தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக