சத்துமாவு உருண்டை
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், கேழ்வரகு மாவு - அரை கப், பாதாம் - 4, முந்திரி - 10, பொட்டுக்கடலை - அரை கப், நெய், பொடித்த சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுக்கவும். கேழ்வரகு மாவையும் வெறும் கடாயில் வறுக்கவும். பொட்டுக் கடலையை கடாயில் சிறிது சூடாகும் வரை வறுத்து, மிக்ஸியில் பொடித்து சலிக்கவும். பாதாம், முந்திரியை உடைத்து நெய்யில் வறுக்கவும். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து, பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யை சூடாக்கி இதில் நன்றாக கலந்து உருண்டைகளாக உருட்டவும்.
பயணத்தின்போது களைப்பை நீக்கி, சக்தி கொடுக்கும் சத்தான ரெசிப்பி இது. பொடித்த சர்க்கரைக்குப் பதில் நாட்டுச் சர்க்கரையும் பயன் படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக