வெள்ளி, 6 ஜனவரி, 2017

பள்ளிபாளையம் சிக்கன்.

பள்ளிபாளையம் சிக்கன்.

*தேவையான பொருட்கள் :*

சிக்கன் - 1 கிலோ
சின்னவெங்காயம் - கால் கிலோ
வரமிளகாய் - 10 ( மிளகாய் உள் இருக்கும் விதைகளை எடுத்து விடவேண்டும்)
தேங்காய் - 1 (சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்)
சிக்கன் மசாலா - 50 கிராம்
எண்ணெய் - 6 ஸ்பூன்
கறிவேப்பில்லை - 6 இலை
கொத்தமல்லி - 6 இலை
மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு

*செய்முறை :*

சிக்கனை சுத்தமாக தண்ணீரில் அலாசி தண்ணீரை வடிகட்டிக்கொள்ள வேண்டும். அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்ற கடுகு பொறிய விடவேண்டும். பின் வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும். சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு வதக்க வேண்டும் வதக்கும் போது மஞ்சள் தூள் கொஞ்சம் சிக்கன் மசாலா துளை போட்டு கொஞசம் தண்ணீர் தெளித்து வேக விடவேண்டும் சிக்கன் வேகும் போது கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

உப்பு தேவையான அளவு போட்டு விட்டு 20 நிமிடம் கழித்து நறுக்கிய தேங்காயை போட்டு நன்கு கிளற வேண்டும். மீண்டும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து சிக்கனை வேக விடவேண்டும். சிக்கன் வெந்துவிட்டதா என ஒரு துண்டு எடுத்து சாப்பிட்டு பாருங்கள்.

வெந்த உடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கி வைத்து சாப்பிட ஆரம்பிக்கவும். இப்ப சுவையான பள்ளிபாளையம் சிக்கன் தயார்.

*இந்த பள்ளிபாளையம் சிக்கன் ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரபலம்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக