கேரளா மெது வடை
*என்னென்ன தேவை? *
உளுந்து - 250 கிராம்,
பச்சை மிளகாய் - 4,
கறிவேப்பிலை - சிறிதளவு,
தேங்காய் எண்ணெய் - 250 கிராம்,
உப்பு - தேவைக்கு,
அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி.
*எப்படிச் செய்வது? *
உளுந்தை தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு கழுவி சிறிது தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, அரிசிமாவு சேர்த்து நன்கு கலக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், வடையை தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக