கத்திரிக்காய் வதக்கல்
தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ, எண்ணெய் - அரை குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
அரைக்க: காய்ந்த மிளகாய் - 8, தனியா - 2 கைப்பிடி அளவு, வெந்தயம் - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மிளகு - ஒன்றரை டீஸ்பூன், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கைப்பிடி அளவு.
செய்முறை: அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடாக்கி, அரைக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து மிக்ஸியில் பொடி செய்யுங்கள்.
கத்திரிக்காயை நன்கு கழுவி, காம்பு நீக்கி, லேசாக நறுக்கி, நான்காக பிளந்து கொள்ளுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து அரைக்குழிக் கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கத்திரிக்காயை சேர்த்து நன்கு வதக்குங்கள். கூடவே உப்பு சேருங்கள். நன்கு சுருண்டு வரும்போது, அரைத்து வைத்துள்ள பொடியை பரவலாகத் தூவி கிளறி இறக்குங்கள். கத்திரிக்காய் வதக்கல் ரெடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக