கம்பு தோசை
தேவையானவை:
கம்பு - ஒரு கப்,
முழு உளுத்தம்பருப்பு - அரை கப்,
இட்லி அரிசி - ஒரு கப்,
கெட்டித் தயிர் - ஒரு கப்,
இஞ்சித் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப்,
பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்),
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு,
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
கெட்டித் தயிரை நன்கு கடைந்து, தண்ணீர் விட்டு கலக்கவும். கம்பு, அரிசியைக் கழுவி, ஒன்றுசேர்த்து கடைந்த தயிரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
உளுந்தை தனியாக நீரில் ஊறவைக்கவும்.
இவற்றை தனித்தனியாக அரைத்து, ஒன்றாக கலந்து, உப்பு போட்டு கரைத்து மறுநாள் வரை ஊறவிடவும் (இட்லி மாவு போல).
மாவை தோசை ஊற்றுவதற்கு முன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்துக் கலக்கவும்.
கடுகு, கறிவேப்பிலையை சிறிதளவு எண்ணெயில் தாளித்து சேர்த்துக் கலக்கவும்.
தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு:
கம்பு மாவு, அரிசி மாவு ரெடிமேடாக கிடைக்கிறது. அவற்றைப் பயன்படுத்தியும் தயாரிக்கலாம். ஆனால், சுவையும், சத்தும் ஊறவைத்து செய்வதில்தான் அதிகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக