அடை உப்புமா
*தேவையான பொருட்கள் :*
அடை – இரண்டு (உதிர்த்து கொள்ளவும்)
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – கால் டீஸ்பூன்
கரிவேபில்லை – சிறிதளவு
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
புளி கரைச்சல் – ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
*செய்முறை :*
•• கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கரிவேபில்லை சேர்த்து தாளிக்கவும்.
•• பிறகு, அதில் மிளகாய் தூள், புளி கரைச்சல், உப்பு சிறிதளவு, உதிர்த்த அடை சேர்த்து நன்றாக கலக்கவும்.
•• பின், தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி கிளறி சூடாக பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக