புதன், 4 ஜனவரி, 2017

டைமண்ட் பிஸ்கட்ஸ் |diamond biscuits

டைமண்ட் பிஸ்கட்ஸ் |diamond biscuits

தேவையானவை: 
மைதா மாவு - கால் கிலோ
சர்க்கரை - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - கால் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை: 
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் 2 ஸ்பூன் சூடான எண்ணெயையும் ஊற்றி, நன்கு பிசிறிக் கொள்ளவும். 

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். அரை மணி நேரம் மூடி வைக்கவும். 

மாவை எடுத்து பெரிய பெரிய உருண்டையாக உருட்டி, சப்பாத்தி போல் சிறிது கனமாக தேய்த்துக் கொள்ளவும். 

இதை ஒரு கத்தி மூலம் டைமண்ட் வடிவில் கட் செய்து வைத்து கொள்ளவும்.

பிறகு, கடாயில் எண்ணெயைக் காய வைத்துக் கொள்ளவும்.

காய்ந்த எண்ணெயில் அடுப்பை சிம்மில் வைத்து பொன்னிறமாக வெந்து வந்தவுடன் எடுக்கவும். 

ஆற வைத்து பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும். சுவைாயன டைமண்ட் பிஸ்கட்ஸ்
ரெடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக