மிளகு பொங்கல்
இது வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் திருக்கோவில் அரூட்பிரசாதம்.
இந்த பொங்கல் மிகவும் ருசியாக இருக்கும். இந்த பிரசாதம் தை திருநாள் அன்று ஒவ்வொரு வருடமும் காலையில் வழங்கப்படும்.
தேவையான பொருட்கள்
புது பச்சை பொங்கல் அரிசி 1 கப்
பாசிப்பருப்பு 1/4 கப்
தண்ணீர் 3 1/2 கப்
பச்சை மிளகாய் 4 ( பொடியாக நறுக்கியது)
பூண்டு பற்கள் 5 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி 1 இன்ச் ( பொடியாக நறுக்கியது)
உப்புத்தூள் தேவையான அளவு
பசுநெய் 2 மேஜைக்கரண்டி
தாளிக்க
பசுநெய் 3 மேஜைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி ( அம்மிகல்லில் நசுக்கியது)
மிளகு 3 தேக்கரண்டி ( அம்மிகல்லில் நசுக்கியது)
பெருங்காயம் 1/4 சிட்டிகை
முந்திரி பருப்பு 15
செய்முறை
1. அரிசியை நன்றாக சுத்தமாக அலசி, சுத்தமாக கழுவி எடுத்து 5 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.
2. இப்பொழுது பிரஷர் குக்கரில் ஊற வைத்துள்ள அரிசி, பாசிப்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் , பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்து , அதனுடன் 3 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக குழைய குழைய வேக வைத்து விசில் விட்டுகோங்க.
3. பிரஷர் குக்கரின் மூடியை திறந்த உடன் 2 மேஜைக்கரண்டி பசு நெய்யை விட்டு கிளறு கிளறு என்று கிளறவும்.
4. இப்பொழுது வடச்சட்டியில் 3 மேஜைக்கரண்டி நெய்யை விட்டுகோங்க , அது நன்றாக காய்ந்ததும் அதில் பொடியாக பொடித்து வைத்துள்ள சீரகத்தையும மற்றும் மிளகையும், அதனுள் பெருங்காய தூளையும் நன்றாக வதக்க வேண்டும்.
5. பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதில் முந்திரி பருப்பை நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.
6. இந்த வடச்சட்டி கலவையை பிரஷர் குக்கரில் கொட்டி நன்றாக கிளறு கிளறு என்று கிளறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக