திங்கள், 31 ஜூலை, 2017

உடலுக்கு ஆற்றலைத் தரும் சப்போட்டா பழம்



உடலுக்கு ஆற்றலைத் தரும் சப்போட்டா பழம்

கண்களுக்கு நல்லது: சப்போட்டா பழம் வைட்டமின் ஏ வை அதிகளவு கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி படி வைட்டமின் ஏ வை கொண்டுள்ளதால் பார்வையை பலப்படுத்துவதோடு முதுமையை தள்ளிபோடும் ஆற்றலை வழங்குகிறது. ஆதலால் தினமும் ஒரு சப்போட்டா பழம் எடுத்துக்கொள்ளலாம்..

இதய பாதுகாப்பு: இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்றபடி பாதுகாக்கும் தன்மையை சப்போட்டா பழம் கொண்டுள்ளது என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான தூக்கம் வரும்.

ஆற்றலை வழங்கக்கூடியது: நாம் சுறுசுறுப்பாக நடந்து செல்ல நமக்கு மிகவும் அவசியமாக இருப்பது ஆற்றல். அந்த ஆற்றலை அதிகளவு கொண்டுள்ளது சப்போட்டா பழம் . ஏனெனில் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் குளுக்கோஸ்சை கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு ஆற்றல் அதிகம் தேவைப்படும் அதனால் அவர்களுக்கு சப்போட்டா பழம் பரிந்துரைக்கப்படுகிறது.

புற்றுநோய் தடுப்பு: வைட்டமின் ஏ மற்றும் பி யை கொண்டுள்ளதால் உடலில் ஏற்படக்கூடிய சளி, தோளின் அமைப்பு முறை, போன்றவற்றை ஆரோக்கியமாக பராமரிக்கிறது. சப்போட்டாவில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள், நார்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. அதாவது வாய் குழி புற்றுநோய், பெருங்குடல் சளி சவ்வை நச்சுகளிடமிருந்து பாதுகாக்க வைட்டமின் ஏ வை கொண்டு பாதுகாப்பு வழங்குகிறது.

எலும்பை உறுதிப்படுத்தும்: எலும்பை பலப்படுத்த தேவையான கால்சியம், பாஸ்பரஸ், இருப்பு சத்துகளை அதிகளவு கொண்டுள்ள சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் எலும்பை பலப்படுத்தலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் எலும்பின் வளர்ச்சியை மேம்படுத்தி எலும்புக்கு வலு சேர்க்கிறது.

மலச்சிக்கலுக்கு நிவாரணம்: சப்போட்டா சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. சப்போட்டா மூலமாக நார்ச்சத்துகளை நமது உடலுக்கு 5.6/100g அளவு வழங்குகிறது. இதனால் மலச்சிக்கள் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சப்போட்டா பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.

பித்தம் நீக்க: சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து. சப்போட்டா பழத்தை கூழாக்கி, சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்து போட்டு சாப்பிடலாம். இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.

கறிவேப்பிலை குழம்பு



கறிவேப்பிலை குழம்பு
.
#தேவையானப்_பொருட்கள்:
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
மிளகு - 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
புளி - எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
.
#செய்முறை:
உப்பு, புளி இரண்டையும் ஊற வைத்து, கரைத்து, 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.
.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும். -
அதே வாணலியில் கறிவேப்பிலையைப் போட்டு சிறிது வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் வறுத்து வைத்துள்ள பருப்புகள், மிளகாய், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
.
தேங்காய்த்துருவலை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் மீதமுள்ள எண்ணையை விட்டு, சூடானதும் அதில் கடுகு போட்டு, வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம், வெந்தயம் போட்டு, வெந்தயம் சற்று சிவந்ததும் (கருக விடக்கூடாது) அதில் புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் பொடித்து வைத்துள்ள கறிவேப்பிலைப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி விடவும்.
-
மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து, தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கிளறி சிறு தீயில் மீண்டும் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
.
#குறிப்பு: விருப்பமானால் ஓரிரண்டு பூண்டுப்பற்கள், மற்றும் சாம்பார் வெங்காயத்தையும் தாளிப்பில் சேர்க்கலாம்.
.
நல்ல காரசாரமான இந்தக்குழம்பு குளிர் காலத்துக்கு ஏற்றது.

சிறப்பான சிறுதானியம் குதிரைவாலி



சிறப்பான சிறுதானியம் குதிரைவாலி

ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும் செரித்தலின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது. உடலில் கபத்தினுடைய ஆதிக்கம் அதிகரித்து அதனால் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுவார்கள்.

குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும். நூறு கிராம் குதிரைவாலியில் புரத சத்து  6.2கிராம், கொழுப்பு சத்து  2.2 கிராம், தாது உப்புகள் 4.4 கிராம், நார்ச்சத்து 9.8 கிராம், மாவுச்சத்து 65.5 கிராம், கால்சியம் 11 மில்லிகிராம், பாஸ்பரஸ் 280 மில்லிகிராம் என அடங்கியிருப்பதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மருத்துவ பயன்கள் - உடலைச் சீராக வைக்க உதவுகிறது, சர்க்கரை அளவினை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்டாக வேலை செய்கிறது, இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும், அதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது.

குதிரைவாலியில் ஒரு சத்தான ரெசிபி -

குதிரைவாலி இடியாப்பம்

தேவையானவை:

குதிரைவாலி அரிசி - 1/2 கிலோ
தேங்காய்த் துருவல் - 1/4 கப்,
வெல்லம் - 3 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப, ,

செய்முறை:

குதிரைவாலி அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். நீரை நன்றாக வடித்து விட்டு ஈரம் காய்ந்ததும், மிக்ஸியில் நைசாக அரைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் அரைக்க முடியவில்லையெனில் மாவு மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு மாவு எடுத்து, வெதுவெதுப்பான நீரில் நல்லெண்ணெய், உப்பு சேர்த்து சிறிது சிறிதாக ஊற்றிப் பிசைந்து கொள்ளவும். இடியாப்ப அச்சில் மாவைப் போட்டுப் பிழிந்து, ஆவியில் வேகவிட்டு எடுத்தால், இடியாப்பம் தயார். பொடித்த வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் தூவிப் பரிமாறவும்.

கோதுமை வெஜ் கொழுக்கட்டை



கோதுமை வெஜ் கொழுக்கட்டை  தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு       : ஒரு கப்
அரிசிமாவு : ஒரு மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் : பொடியாக நறுக்கியது ஒன்று
பீன்ஸ் : பொடியாக நறுக்கியது
கேரட் : சிறிது துருவியது
உருளைக்கிழங்கு : துருவியது ஒன்று
கோஸ் துருவல் : ஒரு கப்
மிளகாய் தூள் : ஒரு டீஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
நல்லெண்ணெய் : 2 தேக்கரண்டி
ஆயில் : 2 தேக்கரண்டி                                                                                            செய்முறை:

வெறும் வாணலியில் கோதுமை மாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இத்துடன் அரிசி மாவு மற்றும் உப்புச் சேர்க்கவும். அதனுடன் கொதிக்கும் நீரை சிறிது சிறிதாக ஊற்றி, கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசையவும். நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, பீன்ஸ், கேரட், கோஸ், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு ட்ரையாகும் வரை வதக்க வேண்டாம். லேசான சதசதப்புடன் இருக்கும் அளவிற்கு வதக்கினால் போதும்.

பிசைந்து வைத்துள்ள மாவை எலுமிச்சை பழ அளவு உருண்டையாக எடுத்து, லேசாக எண்ணெய் தொட்டுக் கொண்டு கிண்ணம் போல் செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு வதக்கிய காய்கறி கலவையை வைத்து, மூடி ஓரத்தை ஒட்டவும். மீதமுள்ள மாவிலும் இதே போல் தயார் செய்து, அவற்றை இடர் பானையில் வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தெடுக்கவும்.

மாலை நேர டிபனுக்கு சுவையான கோதுமை வெஜ் கொழுக்கட்டை தயார். தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. குழந்தைகளும், சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடுவதற்கு சிறந்த சத்தயன உணவு இது

பாவ் பாஜி / Pav bhaji



பாவ் பாஜி / Pav bhaji

பாவ் பாஜி மும்பையில் மிகவும் பிரபலமானதாகும்.

தேவையான பொருள்கள் -

உருளைக்கிழங்கு - 3
பிரஷ் பட்டாணி - 100 கிராம்
காலிபிளவர் - 100 கிராம்
கேரட் - 1 சிறியது
குடமிளகாய் - 1
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
பாவ் பாஜி மசாலா - 1 மேஜைக்கரண்டி
வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
மல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

செய்முறை -

உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் தோல் சீவி வெட்டி வைக்கவும். காலி பிளவரையும் நறுக்கி வைக்கவும்.
குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், காலிபிளவர்,  மற்றும் பட்டாணி, சிறிது உப்பு  சேர்த்து 3 விசில் வரும் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
 
நீராவி அடங்கியதும் மூடியை திறந்து வெந்த காய்கறிகளை ஒரு மத்து கொண்டு நன்கு மசித்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, குடமிளகாய்,  மல்லித்தழை எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பச்சை வாடை போனதும் நறுக்கி வைத்துள்ள குடமிளகாய் சேர்த்து வதக்கவும். குடமிளகாய் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் காஷ்மீரி மிளகாய் தூள், பாவ் பாஜி மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து  ஒரு நிமிடம் கிளறவும்.
பிறகு மசித்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி 100 மில்லி தண்ணீரை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். உப்பு சரி பார்த்து தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். மூடி போட்டு கொதிக்க விடவும்.
மசாலா கெட்டியானதும் வெண்ணெய் சேர்த்து கிளறி பிறகு மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். பாவ் பாஜி மசாலா ரெடி.

பாவ் பன் செய்முறை -

தேவையான அளவுக்கு பாவ் பன் எடுத்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து லேசாக சூடானதும் ஒரு மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும். பன்னை அதில் சேர்த்து இருபுறமும் லேசாக சூடு படுத்தி எடுத்துக் கொள்ளவும்.

சூடு படுத்திய பாவ் பன்னோடு இந்த மசாலாவை சேர்த்து அதன் மேல் சிறிது வெண்ணெய் வைத்து பரிமாறவும்.

சாம்பார் சாதம்


சாம்பார் சாதம்

 *தேவையானபொருட்கள்*

புழுங்கல்அரிசி                             – 1 கப்
துவரம்பருப்பு                               – 1/4 கப்
மஞ்சள்பொடி                               – 1/4 டீஸ்பூன்
கத்தரிக்காய்                                 – 2
முருங்கைக்காய்                        – 1
பரங்கிக்காய்                                 – 1/2 கப்
தக்காளி                                          – 1
சின்னவெங்காயம்                     – 15
புளி                                                   – சிறிய எலுமிச்சையளவு
எண்ணெய்                                    – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு                                               – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு                         – 1/2 டீஸ்பூன்
உப்பு                                                 – தேவையான அளவு

*அரைக்க*

சிவப்புமிளகாய்                         – 5
மல்லி                                            – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு                        – 1/2 டீஸ்பூன்
வெந்தயம்                                   – 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல்               – 1 டீஸ்பூன்
பெருங்காயம்                            – சிறிது

*சாம்பார் சாதம் செய்முறை*

துவரம்பருப்பை மஞ்சள்பொடி போட்டு வேக வைத்துக் கொள்ளவும். அரிசியைக் கழுவி குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

காய்கறிகளை சதுரத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை

 போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி,காய்கறிகள் சேர்த்து வதக்கி தண்ணீர்,உப்பு சேர்த்து வேக விடவும்.

காய்கறிகள் வெந்தவுடன் புளித்தண்ணீர்,அரைத்து வைத்துள்ள பொடி, வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

 நன்கு கொதிக்கும் பொழுது வேக வைத்த சாதத்தை அதில் கலந்து நன்கு கிளறி சூடாகப் பரிமாறவும்.


சிக்கன் பாப்கார்ன் ஃப்ரை / CHICKEN POPCORN FRY..



சிக்கன் பாப்கார்ன் ஃப்ரை / CHICKEN POPCORN FRY...



*தேவையான பொருட்கள்*

சிக்கன் துண்டுகள்      –        2(எலும்பில்லாதது, சிறிதாக நறுக்கியது)

வெங்காயம்            -       1

பூண்டு                 –        4 பற்கள்

உப்பு                      –        தேவையான அளவு

நல்ல மிளகு தூள்      –        தேவையான அளவு

*மாவுக் கலவைக்கு*

மைதா                 –        1 கப்

ஆர்கனோ              –        2 தேக்கரண்டி

உப்பு                      –        தேவையான அளவு

நல்ல மிளகு            –        தேவையான அளவு

*முட்டை கலவைக்கு*

முட்டை                 –        1

பால்                     –        1 மேஜைக்கரண்டி

பாப் கார்ன் கலவைக்கு

பிரட் தூள்கள்           –        1 கப்

சோளம்(Corn Flakes)           -           1 கப்

உப்பு                   –        தேவையான அளவு

நல்ல மிளகு           –        தேவையான அளவு

*செய்முறை*


தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

சிக்கனை நறுக்கிக் கொள்ளவும்

வெங்காயம் மற்றும் பூண்டினை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்

லேசாக அரைத்துக் கொள்ளவும்

பின்பு அரைத்த விழுதுடன் சிக்கன், உப்பு மற்றும் நல்ல மிளகு தூள் சேர்க்கவும்

நன்கு கலக்கி தனியே வைக்கவும்

சோளத்தை ஒரு பிளாஸ்டிக் கவரில் எடுத்துக் கொள்ளவும்

அதன் மீது சப்பாத்திக் கட்டை வைத்து உருட்டவும். அப்போது சோளம் உடைந்து சிறிய துண்டுகளாகும்

பின்பு பிரட் தூள்கள், சோளம், உப்பு மற்றும் நல்ல மிளகை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

அவற்றை நன்கு கலக்கவும்

அதன் பின் மாவு, ஆர்கனோ, உப்பு மற்றும் நல்ல மிளகை மற்றொரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

அவற்றையும் நன்கு கலக்கி தனியே வைக்கவும்

பின்பு முட்டை மற்றும் பாலை வேறொரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

முட்டையை நன்கு அடித்து கலக்கவும்

அனைத்தையும் தயாராக வைக்கவும்

பின்பு ஊற வைத்த சிக்கனை எடுத்து மாவுக்கலவையில் போடவும்

மாவு அனைத்து பக்கங்களிலும் படுமாறு நன்கு கிளறவும்

பின்பு சிக்கன் துண்டுகளை முட்டையில் முக்கி எடுக்கவும்

அதன் பின் அதனை பிரட் கலவையில் போடவும்

பின்பு மீண்டும் முட்டையில் முக்கி எடுக்கவும்

அதன்பின் மீண்டும் பிரட் கலவையில் போட்டு எடுக்கவும்

அனைத்து துண்டுகளையும் இதே போல் செய்யவும்

பின்பு அவற்றை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்

பின்பு ஒரு மூடியால் மூடி விடவும்

பொன்னிறமாக பொரிக்கவும்

சிக்கன் ஃப்ரை ரெடி!!!!

குழம்பு மிளகாய் மசால் பொடி..



குழம்பு மிளகாய் மசால் பொடி..


*தேவையான பொருட்கள்:*

கொத்தமல்லி – 500 கிராம்

மிளகாய் வத்தல் – 500 கிராம்

சீரகம் – 250 கிராம்

சோம்பு – 50 கிராம்

மிளகு – 100 கிராம்

கடுகு –  25 கிராம்

வெந்தயம் – 25 கிராம்

அரிசி – 100 கிராம்

உளுந்து – 100 கிராம்

துவரம்பருப்பு – 200 கிராம்

கடலைப்பருப்பு – 200 கிராம்

பெருங்காயத்தூள் – 25 கிராம்

மஞ்சள்தூள் – 100 கிராம்

கறிவேப்பிலை – 50 கிராம்

எண்ணெய் – சிறிது

*செய்முறை:*

கொத்தமல்லியை சிறிது எண்ணெய் விட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.

 மிளகாய் வத்தலை காம்பு கிள்ளி காயவைத்து எண்ணையின்றி லேசாக வறுத்துக் கொள்ளவும்.

சீரகம், சோம்பு, மிளகை ஒன்றாகச் சேர்த்து எண்ணெய் விடாமல் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

 (லேசாக பொரிந்தபின் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்).

பின்பு கடுகையும், வெந்தயத்தையும் போட்டு அதே போல் எண்ணெய் விடாமல் வறுக்கவும்.

 (வெந்தயமும், கடுகும் லேசாக பொரியும் வரை வறுத்தால் போதுமானது).

 அரிசியை எண்ணெய் விடாமல் லேசாக பொரியும் வரை வறுக்கவும்.

 உளுந்தையும் எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

 துவரம்பருப்பையும், கடலைப்பருப்பையும் லேசாக எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

 பெருங்காயத்தையும், கறிவேப்பிலையையும் ஒன்றாகச் சேர்த்து எண்ணெய் விடாமல் வறுக்கவும்.

 (கறிவேப்பிலை மொறு மொறுவென ஒடிக்க வரும் அளவுக்கு வறுத்துக் கொள்ளவும்).

கடைசியாக மஞ்சள்தூளையும் எண்ணெய் விடாமல் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

 இதுவரை வறுத்த எல்லாவற்றையும் ஒரு பேப்பரில் பரப்பி ஆற விடவும்.

 ஆறியபின் மிஷினில் கொடுத்து திரித்து வாங்கவும்.

 இந்த மசால் பொடியை ஆறவைத்து காற்றுப்  புகாத டப்பாக்களில் வைத்திருந்து பயன்படுத்திக் கொள்ளவும்.

*இது*

*புளிக்குழம்பு,*
*மீன் குழம்பு,*
*மட்டன் குழம்பு,*
*காரக் குழம்பு*

*என எல்லாவற்றுக்கும் ஏற்ற குழம்பு மசால் பொடி.*

 நல்ல வாசனையுடன், ருசியாக இருக்கும்.

அரிசி – பொன்னி புழுங்கல் அரிசி அல்லது பச்சரிசி பயன்படுத்திச் செய்ய சுவையாக இருக்கும்.

வறுப்பதற்கு முன் கல் பார்த்துக் கொள்ளவும்.

வறுக்கும் போது குறைவான எண்ணெய் சேர்க்க மசால் பொடி வருடக் கணக்கில் கெடாமல் இருக்கும்.

வறுக்கும் போது வறுபடும் பொருட்கள் கருகி விடாமல் மிதமான தணலில் வறுப்பது அவசியம்.

 அப்பொழுதுதான் மசால் பொடியின் நிறமும், சுவைவும் குறையாமல் இருக்கும்.


க்ரீன் சில்லி சிக்கன் / GREEN CHILLI CHICKEN...



க்ரீன் சில்லி சிக்கன் / GREEN CHILLI CHICKEN...


*தேவையான பொருட்கள்*

*சிக்கனை ஊற வைக்க*

சிக்கன்                     –        300 கிராம்

நெய்                       –        1 தேக்கரண்டி

வெங்காயம்                –        2

எலுமிச்சை சாறு           –        1 மேஜைக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது       –        1 தேக்கரண்டி

மிளகாய் தூள்             –        1/4 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்          –        1/2  தேக்கரண்டி

மஞ்சள் தூள்              –        சிறிது

உப்பு                      –        தேவையான அளவு

*அரைக்க*

மல்லி தளை              –        1/2 கப்

பச்சை மிளகாய்           –        2

தாளிக்க

எண்ணெய்                –        1 மேஜைக்கரண்டி

கறி வேப்பிலை           –        1 கொத்து

ஜீரகம்                    –        1/4 தேக்கரண்டி

பச்சை மிளகாய்           –        2 - 3

*செய்முறை*

சிக்கனை மோரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். அல்லது 2 மணி நேரமாவது ஊற வைக்கவும்.

பச்சை மிளகாய், மல்லித்தளையை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் சிக்கனை எடுத்து அதனுடன் ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்க்கவும்.

நன்கு கலக்கவும். சிக்கன் வேகும் வரை வேக வைக்கவும்.

ஒரு பானில் எண்ணெய் விட்டு சூடானதும் ஜீரகத்தை தாளிக்கவும். பின்பு கறி வேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.

பின்பு அதனுடன் சிக்கன் மற்றும் அரைத்த விழுது சேர்க்கவும். நன்கு கிளறி 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

க்ரீன் சில்லி சிக்கன் ரெடி!!!!!!!!!

பப்பாளி பழத்தின் மகத்துவம்



பப்பாளி பழத்தின் மகத்துவம்
***********************************

1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
8. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
9. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
10. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
11. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
12. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

வாழைப்பழ இனிப்பு அடை..


வாழைப்பழ இனிப்பு அடை..

 குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் உகந்தது இந்த கோதுமை வாழைப்பழ அடை. இன்று இந்த அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  சத்தான கோதுமை வாழைப்பழ இனிப்பு அடை தேவையான பொருட்கள் :  

கோதுமை மாவு - 350 கிராம், வாழைப்பழம் - 2, கருப்பட்டி - 200 கிராம், ஏலக்காய் - 5 கிராம் (பொடிக்கவும்), முந்திரிப்பருப்பு - 100 கிராம் (நறுக்கவும்), நெய் - 20 மி.லி., பல் பல்லாக நறுக்கிய தேங்காய் - 100 கிராம், தண்ணீர் - 1/2 லிட்டர்.

செய்முறை :  

கருப்பட்டியை சிறிது தண்ணீரில் கரைத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.    வாழைப்பழத்தை நன்கு மசித்து, இத்துடன் கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், கரைத்த கருப்பட்டியை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.  

தோசைக்கல்லை காயவைத்து சிறிது நெய் விட்டு அடையாக ஊற்றி மேலே முந்திரிப்பருப்பு, தேங்காயை தூவி மிதமான சூட்டில் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.   சூப்பரான கோதுமை வாழைப்பழ அடை ரெடி.


இப்படித்தான் கிரீன் டீ தயாரிக்கணும்...



இப்படித்தான் கிரீன் டீ தயாரிக்கணும்...

கிரீன் டீயை தூளாக வாங்கி பயன்படுத்த கூடாது. உலர்த்திய கிரீன் டீ இலைகளை வாங்கி, வெந்நீரில் போட்டு, மூடிவைக்க வேண்டும்.

ஒரு சில நிமிடங்களில் கிரீன் டீயின் ஃபிளேவர் வெந்நீரில் கலக்கும்.

 இதில், சர்க்கரை சேர்க்காமல், தேவைப்பட்டால் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடித்தால் முழு பலன்களும் கிடைக்கும்.

க்ரீன் டீயில் பால் சேர்க்கக்கூடாது.

1.கிரீன் டீயில் ஃப்ளவனாய்டு (Flavonoid), கேட்டச்சின் (Catechin) முதலான பாலிபீனால்கள் (Polyphenol) அதிகம் உள்ளன. இவை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன. இளமையிலேயே வயதான தோற்றம் வராமலிருக்க, தினமும் ஒரு கப் கிரீன் டீ அருந்தலாம்.

2. கிரீன் டீயில் சிறிதளவு காஃபின் (Caffeine) இருக்கிறது. இது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மீட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.இதனால் சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும். மூளை நன்றாக இயங்கும்.

3.கிரீன் டீ தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, மறதி நோயான அல்சைமர், மூளையில் டோபோமைன் சரியாகச் சுரக்காததால் வரும் பார்கின்சன் வருவதற்கான வாய்ப்பு 25 சதவிகிதம் குறைகிறது.

4.கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால், உடலில் தேவையற்ற கட்டிகளை வளரவிடாது. பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை கிரீன் டீ குறைக்கிறது.

5. கிரீன் டீயில் அமினோ அமிலங்கள் உள்ளன. இது உடல் மற்றும் மனச் சோர்வைப் போக்கக்கூடியது. எனவே, மன அழுத்தம் உள்ள சமயங்களில் கிரீன் டீ அருந்தலாம்.

6. வெயிட்லாஸ் செய்ய விரும்புகிறவர்கள் தினமும் ஒரு கிளாஸ் கிரீன் டீ அருந்தலாம். இது கொழுப்பைக் கரைத்து ஸ்லிம் ஆக உதவும்

சிக்கன் பொடிமாஸ்



 சிக்கன் பொடிமாஸ்...


*தேவையானவை :*

எண்ணெய் - தே.அளவு
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
சோம்பு
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 1 ( நறுக்கவும்)
மஞ்சள்தூள் - 1/ 4டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கரம்மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
முட்டை -2

*சிக்கனை வேக வைக்க :*

சிக்கன் - 300 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

*செய்முறை :*

🍲கோழியை நன்கு சுத்தபடுத்தி பெரிய துண்டுகளாக நறுக்கி அதில் நிறைய நீர் விட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வேக வைத்து சிக்கனை உதிரி உதிரியாக பொடிமாஸாக செய்து கொள்ளவும்.

🍲அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

🍲வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, மஞ்சளுதூள். மிளகாய்த்தூள், உப்பு, 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள், சிக்கன் ஸ்டாக் சேர்த்து நன்றாக வதக்கவும்.

🍲சிக்கன் பொடிமாஸை சேர்த்து 5 அல்லது 7 நிமிடங்கள் டிரையாக வதக்கவும்.

🍲அதில் 2 முட்டையை உடைத்து ஊற்றி சிக்கனுடன் நன்றாக கலந்து கிளறி விடவும்.

🍲சிக்கன் பொடிமாஸ் தயாரானதும் அடுப்பை அணைக்கவும்.

காரைக்குடி ஸ்பெசல் மட்டன் நெய் பிரட்டல்" மட்டன் பிரட்டல்



காரைக்குடி ஸ்பெசல் மட்டன் நெய் பிரட்டல்"  மட்டன் பிரட்டல் வகையில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் ரெசிப்பி இது.

முதலில் தேவையானவை – (செய்முறை 1 கிலோ மட்டனுக்கு )

மட்டன் – 1 கிலோ
நெய் 100 கிராம்
10 – வரமிளகாய்
1 தேக்கரண்டி மல்லி
1 தேக்கரண்டி சீரகம்
1 தேக்கரண்டி சோம்பு
2 தேக்கரண்டி மிளகு

15 முந்திரி பருப்புகள்
1 மேஜைக்கரண்டி பூண்டு இஞ்சி பேஸ்ட்
1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
பட்டை இரண்டு விரல் அளவு
4 கிராம்பு
4 ஏலக்காய்
தயிர் – 150 மிலி
ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து எடுக்கப்பட்ட சாறு

( டீ ஸ்பூன் மற்றும் டேபிள் ஸ்பூன் வேறுபாடு அறிந்து பொருட்களை சேர்க்கவும் )

முதலில் மட்டனை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். பின்னர் காய்ந்த பான் அல்லது கடாயில் 50 கிராம் நெய் ஊற்றி சூடாக்கவும். சூடாகியதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் பூண்டு இஞ்சி பேஸ்ட் மற்றும் மஞ்சள் தூள், விரல் அளவு பட்டை போட்டு லேசாக வதக்கவும். பூண்டு இஞ்சி பேஸ்ட் வதங்கியதும் வெட்டிய மட்டன் துண்டுகளை அதில் போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் நன்றாக வதக்கவும். வதங்கிய மட்டன் நிறம் மாறிய பின்பு அதை மூடும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி மீடியத்தில் வைத்து நான்கு – ஐந்து விசில் விடவும்.

வரமிளகாய்களுடன் முந்திரி பருப்பு மற்றும்

1 தேக்கரண்டி மல்லி
1 தேக்கரண்டி சீரகம்
1 தேக்கரண்டி சோம்பு
2 தேக்கரண்டி மிளகு
4 கிராம்பு
4 ஏலக்காய் – ஆகியவற்றை காய்ந்த பான் அல்லது வடசட்டியில் போட்டு வறுக்கவும். ரொம்பவும் மொறு மொறு பதத்திற்கு போகாமல், இளம் சூடாய் வறுத்து ஆற வைக்கவும். பின்னர் அந்த பொருட்களை மிக்சியில் சிறிது தண்ணீர் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவை கலந்து அரைத்துக்கொள்ளவும்.

குக்கரின் உள்ள கறியை தனியாக எடுத்துக்கொண்டு கறி வெந்த தண்ணீரை (பிராத் -Broth ) தனியாக எடுத்து வைக்கவும். அகன்ற பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதில் மீதி இருக்கும் 50 கிராம் நெய் விட்டு சூடாக்கவும், சூடாகிய பின் இப்போது வறுத்து அரைத்த மசாலாவை அதில் போட்டு மேற்கொண்டு தயிர் ஊற்றி வதக்கவும். பச்சை வாசனை எல்லாம் போய் மசாலா நன்றாக வதங்கி வந்த பின் அதில் கறியை போட்டு பிரட்டவும். பின்னர் கறி வெந்த தண்ணீரை ஊற்றி அடுப்பை மீடியத்தில் வைத்து 5 நிமிடங்கள் அவ்வப்போது வதக்கியப்படி இருக்கவும். பிறகு கறிவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.

சூடான சோற்றில் போட்டு சாப்பிடவும், இட்லி, சப்பாத்தி போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ளவும் மிக மிக சுவையாக இருக்கும்.

வியாழன், 27 ஜூலை, 2017

இந்த காய்களைச் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்…



இந்த காய்களைச் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்…

சீரான உணவு, முறையான உடற்பயிற்சி இவற்றின் மூலம் உடல் ஆரோக்கியத்தை எப்போதும் நன்முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் உணவின் பங்கு மிகவும் முக்கியமானது.

வாழைப்பூ:

இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு:

இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்:

இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக் கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

பாகற்காய்:

வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு:

கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

பீட்ரூட்:

கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

வெண்டைக்காய்:

போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

முருங்கைக் காய்:

வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

சுண்டைக்காய்:

புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

சுரைக்காய்:

புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

குடைமிளகாய்:

வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

அவரைக்காய்:

புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

காரட்:

உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கொத்தவரங்காய்: இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கத்தரி பிஞ்சு:

கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகளால் சிறுவர்களின் மூளை பாதிக்கும்…


பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகளால் சிறுவர்களின் மூளை பாதிக்கும்…

பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட பாஸ்ட் புட் எனப்படும் நொருக்குதீனிகளை உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையில் பாதிப்பு ஏற்படும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று ஆய்வு எச்சரித்துள்ளது

டிரான்ஸ் பேட் கொழுப்பு:

தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் பேட் போதுமானது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிரான்ஸ் பேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு எச்சரிக்கை:

இதேபோல் ஜங்க் புட் அதிகம் உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையில் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சரிவிகித உணவு உட்கொள்ளும் குழந்தைகளை விட ஜங்க் புட் உட்கொள்ளும் குழந்தைகளில் மூளை வளர்சி விகிதம் பாதிக்கும் அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் 14 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிகள், பாக்கெட் சிப்ஸ் போன்றவைகளை வழங்குவதை தவிர்த்து காய்கறிகள், பழங்கள், சத்தான பயறுவகைகளை உணவாக வழங்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரை.


கடுகும் கறிவேப்பிலையும் சேர்ந்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்…



  கடுகும் கறிவேப்பிலையும் சேர்ந்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்…

கடுகும், கறிவேப்பிலையும் சமையலில் சேர்க்கும் பொருள் மட்டுமல்ல அதற்கான தனித்துவமான மருத்துவ குணங்கள் உண்டு.

அவற்றுள் சில:

வயிற்றுப்போக்கு நீங்க:

கடுகு 200 கிராம்

கசகசா 100 கிராம்

அதிமதுரம் 100 கிராம்

செய்முறை:

கடுகை சுத்தமான நீரில் கழுவி நிழலில் உலர்த்தவும். கசகசாவை இளம் வறுவலாக வறுத்துக் கொள்ளவும். அதிமதுரத்தை ஒன்றிரண்டாக தட்டி ஒரு மண் சட்டியில் போட்டு 200 மில்லி லிட்டர் தயிரை ஊற்றி ஆறு மணி நேரம் ஊற வைத்து எடுக்கவும். நிழலில் நன்றாக உலர்த்தவும். நன்றாக உலர்ந்த கடுகு, மற்றும் அதிமதுரத்துடன் வறுத்த கசகசாவையும் சேர்த்து நன்றாக மாவாக இடித்து வடிகட்டி, பாட்டிலில் போட்டு வைக்கவும்.

பயன்கள்:

சீதபேதி, அஜீரண பேதி, வயிற்றுப் பொறுமல் நீங்க ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பொடியைக் கொடுத்தால் உடனே நிவாரணம் கிடைக்கும்.

கறுவேப்பிலை தைலம்

தலைச்சுற்று நீங்க:

கறிவேப்பிலை 200 கிராம்

பச்சை கொத்தமல்லி 50 கிராம்

சீரகம் 50 கிராம்

நல்லெண்ணை 600 கிராம்

பசுவின் பால் 200 மில்லி

செய்முறை:

கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும். சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.

எப்படி பயன்படுத்தனும்?

நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

மயக்கம், தலைசுற்று, அசதி, வாய்வுத் தொல்லை

கொத்தமல்லி 200 கிராம்

சீரகம் 20 கிராம்

ஓமம் 20 கிராம்

மிளகு 20 கிராம்

சுக்கு 20 கிராம்

அதிமதுரம் 20 கிராம்

செய்முறை

கொத்தமல்லியை மண் சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். சீரகத்தையும் இளம் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஓமத்தை சிறிது நெய்யிட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். மிளகையும் சட்டியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். சுக்கை தோல் நீக்கி குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்ளவும். அதிமதுரத்தை ஒன்றிரண்டாக இடித்து ஒரு மண் சட்டியில் போட்டு 100 மில்லி லிட்டர் பால் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தவும். பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு இடித்து நன்றாக வடிகட்டவும். வடிகட்டிய தூளை ஒரு மணி நேரம் வெய்யிலில் வைத்து எடுத்து பத்திரப் படுத்தலாம்.

எப்படிபயன்படுத்தணும்:

காலை உணவு முடிந்தவுடன், முப்பது நிமிடங்கள் கழித்து அரை ஸ்பூன் தூளுடன், ஒரு ஸ்பூன் பனைவெல்லமும் சேர்த்து உட்கொண்டு சிறிது வெந்நீர் அருந்த வேண்டும். குறைகள் நீங்கினாலும் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். ஒரு தீங்கும் வராது.

புதன், 26 ஜூலை, 2017

சத்தான டிபன் சோள ரவை வெண் பொங்கல்..



சத்தான டிபன் சோள ரவை வெண் பொங்கல்..

தேவையான பொருட்கள் :

சோள ரவை - ஒரு கப்,

பாசிப் பருப்பு - கால் கப்,

இஞ்சி - சிறிய துண்டு,

மிளகு, சீரகம் - தலா கால் தேக்கரண்டி,

நெய் - ஒரு மேஜைக்கரண்டி,

கறிவேப்பிலை - சிறிது,

உப்பு - சுவைக்கேற்ப,

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி, முந்திரி - 6.

செய்முறை:

இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

பாசிப் பருப்பு, சோள ரவையை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்க வேண்டும்.

குக்கரில் 3 கப் நீர்விட்டு கொதிக்கவிட வேண்டும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ரவை, பருப்பு, உப்பு சேர்த்து, குழைய வேகவைக்க வேண்டும்.

மற்றொரு வாணலியில் நெய்விட்டு, சூடாக்கி முந்திரி, சீரகம், மிளகு, துருவிய இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து வெந்த சோள ரவைப் பொங்கலில் சேர்த்துக் கிளறவும்.

சூப்பரான சத்தான டிபன் சோள ரவைப் பொங்கல் ரெடி.

வேர்கடலை கொழுப்பு அல்ல...! பெண்களின் கர்ப்பபைக்கான மூலிகை…!!



வேர்கடலை கொழுப்பு அல்ல...! பெண்களின் கர்ப்பபைக்கான மூலிகை…!!

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் *போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம்.* எனவே *நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.* தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். *கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம்.* இல்லையேல் *கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.*

*நீரழிவு நோயை தடுக்கும்:*

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் (osteoporosis)  வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

*பித்தப் பை கல்லைக் கரைக்கும்:*

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

*இதயம் காக்கும்:*

நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

*இளமையை பராமரிக்கும்:*

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

*ஞாபக சக்தி அதிகரிக்கும்:*

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

*மன அழுத்தம் போக்கும்:*

நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது

*கொழுப்பை குறைக்கும்*

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

*அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:*

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் *நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள்.* இதன் காரணமாக *குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.*

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடி இருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

*கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:*

*பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது.* இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் *பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.* பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக *பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள்* ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:

*100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.*

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

*பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:*

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

செவ்வாய், 25 ஜூலை, 2017

இஞ்சி ரவை தோசை (GINGER RAVA DOSA)



இஞ்சி ரவை தோசை (GINGER RAVA DOSA)


*தேவையான பொருட்கள்*

மைதா                                                                  -      2 கப்,

அரிசிமாவு                             -      2 கப்,

ரவை                                                                     -      1 கப்,

கடுகு,

பொடியாக நறுக்கிய இஞ்சி,

பச்சை மிளகாய்                                               -               தலா 1 டேபிள்ஸ்பூன்,

புளித்த தயிர்                                      -      2 கப்,

கறிவேப்பிலை ,

மல்லித்தளை                                                  -               சிறிது,

பொடியாக நறுக்கிய வெங்காயம்

 எண்ணெய்                                 -              கால் கப்,

உப்பு                                                                        -               தேவைக்கேற்ப.

*செய்முறை*

2 கப் தயிரில் 2 கப் தண்ணீர் விட்டுக் கடைந்து கெட்டியான மோராக்கவும்.

அதில் மைதா, அரிசி மாவு, உப்பு சேர்த்துக் கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

 பிறகு 1 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் ரவையை வறுத்து, அந்தக் கலவையில் சேர்த்துக் கலக்கவும்.

  சிறிது எண்ணெயில் கடுகு, பச்சைமிளகாய், இஞ்சிதாளித்துக் கலவையில் சேர்க்கவும்.

கலவை பால் மாதிரி நீர்க்க இருக்க வேண்டும்.

தோசைக் கல்லைக் காய வைக்கவும். மாவை ஒரு டம்ளரில் எடுத்து, கல்லின் ஓரத்திலிருந்து நடுப்பகுதிக்கு சுழற்றி ஊற்றவும். வார்க்கக்கூடாது.

 அதன் மேல் பச்சை வெங்காயத்தையும், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் தூவி, பொன்னிறமாக வேகும்வரைவிட்டு எடுத்துப்பரிமாறவும்.

சூப்பரான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு



சூப்பரான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

*கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த எண்ணெய் கத்தரிக்காயை விரும்பி சாப்பிடுவார்கள்.*

*🍃🍂தேவையான பொருட்கள் :*

கத்தரிக்காய் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 15
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
தேங்காய் - 2 துண்டுகள்
பூண்டு - 10 பல்
கடுகு - 1/4 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
தனியா பொடி - 1
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
புளி தண்ணீர் - 1 கப்
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கீற்று
கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

*🍃🍂செய்முறை :*

* கத்தரிக்காய்களை மேலாக காம்பை மட்டும் நறுக்கி விட்டு, மேலே படர்ந்துள்ள காம்பை விட்டு ஒரு கத்தரிக்காயை (பூ போல) நான்கு பாகங்காக வரும்படி நறுக்கி கொள்ளவும்.

* பூண்டை ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும்.

* தக்காளி, கொத்தமல்லி, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கி ஆற விடவும்.

* மிக்சியில் வதக்கிய வெங்காயம், தக்காளியை தேங்காயுடன் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின் நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும்.

* அடுத்து கத்தரிக்காயை போட்டு வதக்கி கொள்ளவும்.

* கத்தரிக்காய் சற்று வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும்.

* இதனுடன் மிளகாய், தனியா, மஞ்சள் பொடிகளை சேர்த்து கிளறவும்.

* அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்.

* நன்கு கொதித்து கத்தரிக்காய் வெந்து குழம்பு திக்கான பதத்துடன் எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

* சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.

திங்கள், 24 ஜூலை, 2017

ஆவாரம் பூவிற்குள் ஒளிந்திருக்கும் ஆயுளை கூட்டும் ஆயிரமாயிரம் மருத்துவ குணங்கள்!



ஆவாரம் பூவிற்குள் ஒளிந்திருக்கும் ஆயுளை கூட்டும் ஆயிரமாயிரம் மருத்துவ குணங்கள்!

ஆவாரம் பூ கடுமையான வறட்சியில் கூட வளர கூடிய ஒரு மருத்துவ தாவரம். இதன் இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்தும் மருத்துவ குணம் கொண்டது. 'ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ' என்று ஒரு பழமொழி இருக்கிறது. அந்த அளவுக்கு ஆவாரம் பூ உடலில் உள்ள நோய்களை குணப்படுத்த கூடிய மருத்துவ குணங்களை கொண்டது.

ஆவாரம் பூவில் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்டுகள் அடங்கியுள்ளன. டென்ஸ்போயிட்கள், டானின்கள், ஃபிளாவனாய்டுகள், சபோன்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ஸ்டீராய்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன

மலச்சிக்கல் பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. தினமும் இரண்டு முறை மலம் வெளியேறினாலே உடலில் பல நோய்கள் அண்டாது. உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால் ஆவாரம் பூ தேனீரை பருகுங்கள்.

புதிய ஆவாரம் பூக்கள் சருமத்தில் ஏற்படும் பூஞ்சை மற்றும் நுண்ணுயிர் தொற்றுக்களுக்கு எதிரியாக விளங்குகிறது. இதனை சருமத்தின் மீது தடவலாம் அல்லது தேநீராகவும் பருகலாம்.

ஆவாரம் பூ தேநீரை பருகுவதால் சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுக்கள் நீங்கும். இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். இரத்தமும் பெருகும்.

அதீத சக்திகள் கொண்ட ஆவாரம் பூ தேநீரை நீங்கள் தொடர்ந்து பருகுவதால், காலரா மற்றும் டைப்பாய்டு போன்ற நோய்களும், காய்ச்சல்களும் கூட குணமாகும்.

சக்கரை நோய்க்கு பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆவாரம் பூ பட்டை மிக சிறந்த பலனை தரும். இந்த ஆவாரம் பட்டை நீரானது சக்கரை நோய் மட்டுமில்லாமல் மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவற்றையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு அரை லிட்டர் நீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினமும் இரண்டு முறை 1.5 அவுன்ஸ் வீதம் குடித்துவர சக்கரை நோய், மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவை குணமாகும்.

ஆவாரம் பூ பொடியை மேனிக்கு பயன்படுத்தினால் மேனி பொன் நிறமாகும். இதனை குளியல் பொடியுடன் சேர்த்து பயன்படுத்தலாம். அல்லது ஆவாரம் பூ தேநீர் குடித்தாலும் இரத்தம் சுத்தமாகி மேனி தங்க நிறம் பெரும்.

காய வைத்த ஆவாரம் பூ அல்லது ஆவாரம் பூ பொடியை நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால், உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

வாரத்திற்கு 6 முட்டை சாப்பிடுங்கள்



வாரத்திற்கு 6 முட்டை சாப்பிடுங்கள்

பலருக்கும் உள்ள தயக்கம் தினமும் முட்டை சாப்பிடலாமா என்பது தான்.

ஆனால் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

முட்டையை தினமும் எடுத்துக் கொள்வது மூலம் உடலுக்கு பல ஆரோக்கியமான பலன்கள் கிடைக்கிறது.

தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவை முட்டையில் உண்டு.

இதில் விட்டமின் ஏ, பி, சி, டி, இ என்று உடலுக்குத் தேவையான அனைத்து வகையான விட்டமின்களும் உள்ளன.

தினம் ஒரு முட்டை சாப்பிடுவதன் வாயிலாக குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.

முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்ஸ்(Antioxidants), கண்பார்வையை தெளிவாக்கும்.

இதயக்கோளாறு மற்றும் பக்கவாத நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.

தலைமுடி வளர்ச்சி மற்றும் தோல் பளபளப்புக்கு முட்டை சிறந்த பங்காற்றுகிறது.

வாரத்துக்கு ஆறு முட்டை உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது குறைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

45 வயதை தாண்டியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உண்டு விட்டு, மஞ்சள் கருவை தவிர்த்து விடுவது நல்லது.

அசத்தலான உருளைக்கிழங்கு பால்கறி!!



அசத்தலான உருளைக்கிழங்கு பால்கறி!!

 சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள இந்த உருளைக்கிழங்கு பால்கறி மிகவும் சு+ப்பராக இருக்கும். இப்போது இந்த உருளைக்கிழங்கு பால்கறி செய்முறையை பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

சிறிய உருளைக்கிழங்கு - அரை கிலோ

வெங்காயம் - 3

தக்காளி - 3

தயிர் - ஒரு கப்

சீரகத் தூள் - 2 டீஸ்பு+ன்

இஞ்சி - பு+ண்டு விழுது - 2 டீஸ்பு+ன்

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பு+ன்

முந்திரி - 15

கரம் மசாலா - 2 டீஸ்பு+ன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

சர்க்கரை - சிறிதளவு

தண்ணீர் - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :

🍚 முதலில் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பின் உருளைக்கிழங்குகளை வேகவைத்துத் தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.

🍚 பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சு+டானதும், உருளைக்கிழங்குகளை அதில் போட்டுப் பொரித்தெடுக்க வேண்டும். பின் மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சு+டானதும், அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி - பு+ண்டு விழுது, முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

🍚 பிறகு வதக்கிய பொருட்களை ஆறவைத்து, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். பின்பு தக்காளியைத் தண்ணீரில் போட்டு வேகவைக்க வேண்டும். தக்காளி ஆறியதும் தோலுரித்து நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

🍚 பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காய விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி விழுதையும் போட்டு வதக்கி அதனுடன் சிறிதளவு சர்க்கரை, மிளகாய்த் தூள், உப்பு போட்டு வதக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

🍚 கடைசியாக நன்றாகக் கொதித்த பிறகு சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்துப் பச்சை வாசனை போனதும். அதனுடன் கெட்டியான தயிர் ஊற்றிக் கிளற வேண்டும். பின் பொரித்துவைத்துள்ள உருளைக்கிழங்குகளை அதில் போட்டு 10 நிமிடம் கழித்து இறக்க வேண்டும்.

🍚 இறுதியாக கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறினால், அசத்தலான உருளைக்கிழங்கு பால்கறி தயார்!!! இதை சப்பாத்தி, பரோட்டாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

முளைகட்டிய பாசிப் பயறு / MOONG SPROUTS


Fireless cooking- அடுப்பு இல்லா சமையல்

முளைகட்டிய பாசிப் பயறு / MOONG SPROUTS

*தேவையான பொருட்கள்*

பாசிப்பயறு            –        1/2 கப்

சூடான நீர்            –        தேவையான அளவு

*செய்முறை*


பாசிப் பயறை நீரால் நன்கு கழுவிக் கொள்ளவும். இறுதியாக சூடான நீரில் கழுவிக் கொள்ளவும்.


கொதிக்க வைத்து ஆறிய நீரில் பாசிப் பயறை ஊற வைக்கவும். 8-10 மணி நேரம் ஊற வைக்கவும்


பின்பு அதனை வடிகட்டி எடுத்து சுத்தமான காட்டன் துணியில் வைத்து இறுகக் கட்டி வைக்கவும்.


பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் வைத்து ஒரு தட்டால் மூடி வைக்கவும்.


அதனை ஒரு சூடான இருட்டான இடத்தில் வைக்கவும்.


மறுநாள் அதனை எடுக்கும் போது அதில் முளை வந்திருப்பதை காணலாம்.


ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

ராகி நிலக்கடலை லட்டு / RAGI PEANUT LADDU / FINGER MILLET LADDU



ராகி நிலக்கடலை லட்டு / RAGI PEANUT LADDU / FINGER MILLET LADDU




*தேவையான பொருட்கள்*

ராகி மாவு                –        1 கப்

எள்                      –        1/2 கப்

நிலக்கடலை             –        1/4 கப்

தேங்காய்                –        1/4 கப்

ஏலக்காய்                –        4

சர்க்கரை / வெல்லம்    –        150 கிராம் (கருப்பட்டியும் பயன் படுத்தலாம்)

நெய்                    –        2 மேஜைக்கரண்டி

*செய்முறை*


ராகி மாவை வறுத்துக் கொள்ளவும்.

 நிலக்கடலையையும் வறுத்து தோலினை நீக்கி விடவும்.

 தேங்காய் தூள் மற்றும் எள்ளையும் வறுத்து தனியே வைக்கவும்.

 வெல்லத்தையும் துருவி தனியே வைக்கவும்.

பின்பு நிலக்கடலை, எள், தேங்காய் மற்றும் ஏலக்காயை தனித்தனியாக நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

பின்பு அனைத்தையும் சேர்த்து மிக்சியில் போட்டு மீண்டும் நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

அதன் பின் வெல்லத்தை நீா் சேர்த்து சூடாக்கவும்.

அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்க்கவும்.

வெல்லக் கரைசல் சரியான பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைக்கவும்.

பின்பு அதனுடன் அரைத்த நிலக்கடலை, மாவுக்கலவையை சேர்க்கவும்.

நன்கு கலக்கி பின்பு சிறிய லட்டுகளாக உருட்டிக் கொள்ளவும்

ராகி நிலக்கடலை லட்டு ரெடி!

கொண்டை கடலை சாட் / CHICKPEAS CHAAT



கொண்டை கடலை சாட் / CHICKPEAS CHAAT


*தேவையான பொருட்கள்*

கொண்டைக் கடலை    –        1/2 கப்

வெங்காயம்            –        1

தக்காளி               –        1

வெள்ளரிக்காய்         –        1/4 கப்

மல்லித் தளை         –        சிறிது

பச்சை மிளகாய்        –        2 (நறுக்கியது)

புளி                   –        1 தேக்கரண்டி

பேரீட்சை              –        1/2 தேக்கரண்டி

சுக்கு தூள்             –        தேவையான அளவு

நல்ல மிளகு தூள்      –        தேவையான அளவு

கார பூந்தி              –        துவையான அளவு

*செய்முறை*

கொண்டைக் கடலையை நன்கு கழுவி இரவு முழுவதும் நீரில் ஊற வைக்கவும்.

பின்பு அதனை வடிகட்டி பிரஷர் குக்கரில் போடவும். அதனுடன்பேக்கிங் சோடா சேர்த்து1 விசில் வரும் வரை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்

விரும்பினால் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கலாம். கடலை வெந்ததும் மீதமுள்ள நீரை வடிகட்டிக் கொள்ளவும்.

பின்பு சாட் மசாலா, உப்பு, நல்ல மிளகு தூள், மங்காய் தூள், சுக்குதூள், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி மற்றும் மல்லித் தளை சேர்க்கவும்.

புளி விழுதை தேனுடனோ அல்லது பேரீட்சை சாறுடனோ கலந்து சேர்க்கவும்.

அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறவும். சுவையை சரிபார்த்து தேவையானவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

பின்பு கார பூந்தி சேர்க்கவும்.

கொண்டை கடலை சாட் ரெடி!!!!!!

கார்ன் ஃபிளாக்ஸ் சாட் / CORN FLAKES CHAAT


கார்ன் ஃபிளாக்ஸ் சாட் / CORN FLAKES CHAAT

*தேவையான பொருட்கள்*

கார்ன் ஃபிளாக்ஸ்     –        11/2 கப்

தக்காளி              –        1

பச்சை மிளகாய்      –        1

மிளகாய் தூள்        –        சிறிது

நல்ல மிளகு தூள்    –        சிறிது

பேரீட்சை / தேன்    –       1

வெங்காயம்          –        தேவையான அளவு

ஜீரகத் தூள்          –        தேவையான அளவு

உப்பு                –        தேவையான அளவு

மல்லித் தளை       –        1 தேக்கரண்டி

விரும்பினால்

உருகிய நெய்        –        1 தேக்கரண்டி

*செய்முறை*

தேன் மற்றும் கார்ன் ஃபிளாக்ஸை தவிர மீதமுள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளவும். காய்களை நறுக்கிக் கொள்ளவும்.

தேன் சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு அதனுடன் கார்ன் ஃபிளாக்ஸ் சேர்க்கவும். நன்கு கிளறவும்.சாட் ஜீரகத் தூள் மற்றும் நெய் சேர்க்கவும்.

கார்ன் ஃபிளாக்ஸ் சாட் ரெடி!

தயிர் மசாலா இட்லி



தயிர் மசாலா இட்லி..


*என்னென்ன தேவை?*

இட்லி - 6,
தயிர் - 200 மி.லி.,
இஞ்சி + பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,
உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு.

*தாளிக்க...*

கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - தேவையான அளவு.

*அலங்கரிக்க...*

துருவிய கேரட், தேங்காய்த் துருவல், நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லி அனைத்தும் சேர்த்து - 1 கப்.

*எப்படிச் செய்வது?*

இட்லியை 6 துண்டுகளாக போட்டு எண்ணெயில் பொரித் தெடுத்து கொள்ளவும்.

தயிரில் அரைத்த பச்சைமிளகாய், இஞ்சி விழுது, உப்பு, மஞ்சள் தூள், தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து தயிர் கலவையில் கொட்டி கலந்து கொள்ளவும்.

 தட்டில் பொரித்த இட்லியை வைத்து, அதன் மேல் தயிர் கலவையை ஊற்றி, அலங்கரிக்க கொடுத்த பொருட்களால் அலங்கரித்து பரிமாறவும்.


காலையில் வெறும் வயிற்றில் இவைகளை சாப்பிடுங்கள் நீங்க நோயின்றி 100வயசு வரை வாழலாம்!..



காலையில் வெறும் வயிற்றில் இவைகளை சாப்பிடுங்கள் நீங்க நோயின்றி 100வயசு வரை வாழலாம்!..

உலகில் உயிர்கள் வாழ மிக அவசியமானது உணவு. அது, அறுசுவையும் கலந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில், அவைதான் நம் உடலுக்கும் உயிருக்கும் ஆதாரமான தாதுக்களாகிய பித்தம், கபம், வாதம் ஆகியவற்றைச் சமநிலையில் வைத்து, நம் உடல் நலத்தைக் காப்பவை. அதே நேரம், எல்லா உணவுகளையும் எல்லா நேரத்திலும் எடுத்துக்கொள்வதும் தவறானது.

ஒரு நாளின் தொடக்கத்துக்கான பூஸ்ட்டராக இருப்பது, காலைஉணவுதான். காலை உணவே நம் உடலுக்கும் மூளைக்கும் தேவையான சுறுசுறுப்பைத் தரும். காலை உணவைத் தவிர்த்தால், நமது மூளை சோர்வடையும். தேவை இல்லாமல் சாப்பிடத் தூண்டும். இது உடல் எடையை அதிகரிக்கும். காலை உணவில் எவற்றை எல்லாம் எடுத்துக்கொள்ளலாம், எவற்றைத் தவிர்க்கலாம் ???

பருத்திப்பால்
காலையில் காபி, டீ குடிப்பதற்குப் பதிலாக, பருத்திப்பால் குடிக்கலாம். முதல் நாள் இரவிலேயே பருத்தி விதைகளைத் தேவையான அளவு எடுத்து, ஊறவைத்து, காலையில் அதில் இருந்து பால் எடுத்து (ஒரு டம்ளர்), தேங்காய்ப் பால் (ஒரு டம்ளர்), பசும்பால் (ஒரு டம்ளர்) கலந்து குடிக்கலாம். கடின உடல் உழைப்பு செய்பவர்கள், இதனுடன் சம்பா அவல், கருப்பட்டி சேர்த்து, கஞ்சிபோல் காய்ச்சிக் குடிக்க, அன்றைய காலை உணவு அபாரம்!

பூண்டுக் கஞ்சி
பூண்டு ஒரு கை அளவு, சாரணைவேர் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்), சுக்கு (சிறிதளவு), முருங்கை இலை (ஒரு கைப்பிடி), புழுங்கல் அரிசி (தேவையான அளவு) மற்றும் பசும்பால் அல்லது தேங்காய்ப் பால் ஆகியவற்றைச் சேர்த்துக் கஞ்சி காய்ச்சி, வாரம் ஒரு முறை காலை வேளையில் குடித்துவர, வாயுத்தொல்லைகள் அறவே நீங்கும்.

காலையில் டிபன் வகைகளுக்குச் சட்னி சாப்பிட்டுச் சலிப்படைந்தவர்கள், பயறு, கடலை, காராமணி, துவரை, உளுந்து, மொச்சை ஆகியவற்றை கடுகு, மிளகு, பெருங்காயம், சுக்குடன் சேர்த்து, கறியாகச் சமைத்து, இட்லி, புட்டு, தோசை, இடியாப்பம், ஆப்பம் ஆகியவற்றுடன் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் சிறுதானியங்களில் சமைத்த உணவுகளுடன் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

பழைய சோறு
இரவில் செய்த அரிசிச் சோறு மீந்துபோனால், அதில் நீரூற்றி வைக்கலாம். நீரூற்றிய சோறு அதாவது, பழைய சோற்றை நீருடன் காலை வேளையில் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இதனோடு, சிறிய வெங்காயம் இரண்டு சேர்த்துச் சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாகப் பெருகும். பழைய சோற்றுடன் மோர் சேர்த்தும் சாப்பிடலாம்.

 பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 முதலான சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், பழைய சோறு குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், சைனஸ் முதலான தொந்தரவு உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது. நிசிநீர் எனப்படும் பழைய சோற்று நீர் அருந்த, நாவறட்சி நீங்கி, உடல் வெப்பம் தணியும்.

இஞ்சி – தேன்
இஞ்சியைத் தோல் நீக்கி, அரைத்து, சாறு எடுத்து, அதனுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிடலாம். இதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும். மேலும், இஞ்சியானது உமிழ் நீரைப் பெருக்கி, பசியைத் தூண்டும். செரிமானத்திறன் மேம்படும். வயிற்றுப்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. உடல் பருமன் உள்ளவர்கள், நீரில் தேன் கலந்து பருகலாம்.

வெந்தய நீர்
வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.

வெந்தயக் களி
100 கிராம் பச்சரிசி, 10 கிராம் வெந்தயத்தைத் தனித்தனியாக மாவு போல பொடித்துக்கொள்ள வேண்டும். இதை, வாரத்துக்கு ஒருமுறை காலையில், களியாகச் செய்து சாப்பிட, உடல் வெப்பம் தணியும். அரிசியில் மாவுச்சத்து உள்ளதால், உடல் எடை அதிகரிக்கும். பெண்களுக்கு இது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கும் ஏற்றது.

உளுந்தங்களி
பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாகக் கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.

#காலையில்அருந்தக்கூடியஎளியபானங்கள்

விழித்தவுடன் சுத்தமான நீர் இரண்டு டம்ளர் அருந்த மலம், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இல்லாமல் இருக்கும். வெந்நீர் அருந்த மந்தம் நீங்கும்.

குழந்தைகளுக்குப் பல தானியங்கள் கலந்த சத்து மாவுக் கஞ்சி பால், வெல்லம், நாட்டுச்சர்க்கரை கலந்து கொடுக்கலாம். கேழ்வரகை முளைக்கட்டி அரைத்து, பால் எடுத்துக் கஞ்சி காய்ச்சி அருந்தலாம். இதில் கால்சியம் நிறைவாக உள்ளதால், எலும்புத் தேய்மானம் உள்ளவர்களுக்குச் சிறந்த பானம்.

பாதாம், சோயா போன்றவற்றை நீரில் ஊறவைத்து அரைத்து, பால் எடுத்து, கஞ்சி காய்ச்சிக் குடித்துவந்தால், உடல் பலம் பெறும். இதனுடன், வெல்லம், ஏலப்பொடி, நாட்டுச்சர்க்கரை முதலானவற்றைச் சேர்த்துப் பருகலாம்.

வெயில் காலங்களில் கம்பங்கஞ்சியை மோருடன் கலந்து குடிக்க, உடல் வெப்பம் நீங்கும்.

தேங்காய்ப் பாலை வெறும் வயிற்றில் குடிக்க, வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்கும்.

#எதைத்தவிர்க்கவேண்டும்?

காலையில், மிகவும் புளிப்பு உணவுகளான எலுமிச்சை, புளி, தக்காளி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், வாழைப்பழம், எண்ணெயில் பொரித்த உணவுகள், மாமிச உணவு, இளநீர் முதலானவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக் கூடாது.

இவை பித்தம், வாதம் முதலானவற்றை அதிகப்படுத்தி, வயிற்று நோய்கள், குடல் நோய்களை உண்டாக்கும். வாழைப்பழத்தை உணவுக்குப் பின் எடுத்துக்கொள்ளலாம்.

அதே போல் டீ, காபி முதலானவற்றை காலையில் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவை, வயிற்றுக்கோளாறு, குடல்புண், செரிமானக் குறைபாடு முதலானவற்றை ஏற்படுத்தும்.

வெறும் வயிற்றில் இலகுவானதும், எளிதில் சக்திதர வல்லதும், எளிதில் ஜீரணமாகக்கூடியதுமான உணவுகளையும், நீர்ச்சத்து உடையதுமான உணவுகளை எடுத்துக்கொள்வதுதான் நம் போன்ற வெப்ப மண்டல நாட்டு மக்களுக்குப் பொருந்தும்.

ஞாயிறு, 23 ஜூலை, 2017

தேங்காய் பால் பிரியாணி



தேங்காய் பால் பிரியாணி...

*🍃🍂என்னென்ன தேவை?*

பாசுமதி அரிசி – 1 கப்
வெங்காயம் – 1
கேரட் – 1
பீன்ஸ் – 10
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
தடித்த தேங்காய் பால் – 1 கப்
தண்ணீர்- 1 கப்
உப்பு – சிறிது
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்

*🍃🍂அரைக்க…*

பட்டை – 2
பெருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1
ஏலக்காய் – 4
கிராம்பு – 4
இஞ்சி – 3 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 5

*🍃🍂எப்படிச் செய்வது?*

ஜார் ஒன்றில் பட்டை, பெருஞ்சீரகம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எடுத்து நன்றாக மசித்து வைக்கவும்.

பாசுமதி அரிசி எடுத்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். கடாயில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து அதில் சிறிது உப்பு தூவி பின் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.

பின்னர் மஞ்சள் தூள், கேரட், பீன்ஸ், சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது ஊற வைத்த அரிசியை சேர்த்து கிளறி தேங்காய் பால் சேர்க்கவும்.

பின் தண்ணீர் சேர்த்து மூடி கொண்டு மூடி அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.

*🔹தேங்காய் பால் பிரியாணி தயார்!!!*🔹

ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாசுந்தி பாயாசம்..



ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாசுந்தி பாயாசம்..


பாசுந்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 
தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கப் பால் - 1/2 லிட்டர் கண்டென்ஸ்டு மில்க் - 1/2 கப் நெய் - 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை - தலா 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை - 8 டேபிள் ஸ்பூன் குங்குமப்பூ - 1 சிட்டிகை வெதுவெதுப்பான பால் - 1/4 கப்

*🔹செய்முறை:*🔹

முதலில் அரிசியை நீரில் 4-5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயம் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை சேர்த்து ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் அரைத்து வைத்துள்ள அரிசி மாவை சேர்த்து, 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

பின்பு அதில் 1/2 லிட்டர் பால் சேர்த்து நன்கு கிளறி, பின் நெய் ஊற்றி கிளறி விட வேண்டும். அரிசியானது நன்கு வெந்ததும், அதில் சர்க்கரை சேர்த்து 1-2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

பின் அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி விட வேண்டும். ஒருவேளை கலவையானது நன்கு கெட்டியாக இருந்தால், அதில் 1-2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிறகு

 அதில் வெதுவெதுப்பான பால் சேர்த்து நன்கு கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, இறக்கி வைத்துள்ள கலவையில் சேர்த்து கிளறினால்,

🔹பாசுந்தி ரெடி!!!

உடல் நலத்தை பாதுக்காக்கும் மஞ்சளின் மருத்துவ குணங்கள்...


உடல் நலத்தை பாதுக்காக்கும் மஞ்சளின் மருத்துவ குணங்கள்...

இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள் மஞ்சள். மஞ்சளில் குர்க்குமின் (Curcumin ) எனும் வேதிப்பொருள் உண்டு. இதுவே மஞ்சளுக்கு நிறத்தை  தருகிறது. மஞ்சள் தனக்குள் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. தமிழர் பாரம்பரியத்தில் மஞ்சளுக்கு மகத்தான இடம் உண்டு. வழிபாட்டில்  துவங்கி, உணவு, மருந்து, அழகுசாதனப் பொருள், கிருமிநாசினி என தமிழர் வாழ்வில் மஞ்சளையும் மருத்துவத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. சித்த  மருத்துவத்தில் முக்கியப் பயன்பாட்டுப் பொருளாகவும் மஞ்சள் இருந்துள்ளது.

மஞ்சள் அழகு சாதனப் பொருளாக பெண்களால் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்படுகிறது. கஸ்தூரி மஞ்சள் முகத்திற்கு ஒருவித மினுமினுப்பையும்,  வசீகரத்தையும் தருகிறது. வாசனைப் பொடிகளிலும், வாசனைத் தைலங்களிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. சமையல் அறையில் மணக்கும் வசீகரம் விரலி  மஞ்சளுக்கே உரியது. மஞ்சள் தான் இருக்கும் இடத்தில் கிருமிகளை அழிப்பதுடன் நிறத்தால் அழகையும் தருகிறது.

ஒரு காலத்தில் நோய் வராமல் தடுப்பதற்காக வாசற்படிகளில் மஞ்சள் பூசுவது, வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பது போன்ற பழக்கம் இருந்தது. சிறு  உடல் நலப் பிரச்னைகளுக்கு மருந்தாகவும் பயன்பட்டது. மூக்கடைப்புக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கின் வழியாக இழுத்தால் குணமாகும். வேனல்  கட்டி, நகச்சுற்றி, வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து பாதிப்பு உள்ள இடத்தில் பற்றுப் போட வேண்டும்.

மஞ்சளையும் துணிக்குப் போடும் சோப்பையும் கலந்து கட்டிகளுக்குப் பூசினால் உடைந்துவிடும். அம்மை நோய் பாதிக்கப்பட்டால் மஞ்சளுடன் வேப்ப  இலைகளையும் அரைத்து பூசுவது வழக்கம். அம்மை நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம். மது வகைகள், பழச்சாறு போன்றவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது.

இது பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் மருத்துவ குணம் கொண்டது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, குடற்பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல்  வாய்ந்தது. நீரழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைப்பதோடு, சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தியும் மஞ்சளுக்கு அதிகமாக உண்டு. மஞ்சளை சுட்டு பற்பொடியாய் உபயோகித்தால் பல் நோய்கள் குணமாகும். மஞ்சளின் சத்து எண்ணெய் உட்கொண்டால் கல்லீரலில் பித்தநீர் சுரப்பதையும்  கட்டியாவதையும் குணப்படுத்த வாய்ப்பு உள்ளது. கலப்படமில்லாத மஞ்சள் தூள் கடைகளில் கிடைப்பது அரிதுதான்.

சுத்தமான விரலி மஞ்சளை வாங்கி வீட்டிலோ, மெஷினிலோ அரைத்து வைத்தும் பயன்படுத்தலாம். மஞ்சள் கலந்த குழம்பு நல்ல மணம், நிறம் கொடுப்பதோடு,  வயிறு தொடர்பான நோய்களையும் போக்குகிறது. இறைச்சி வகைகள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது. பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி,  சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும். பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, கர்ப்பப்பை சிக்கலுக்கு, மஞ்சள் பொடி  சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கிறது.

விரலி மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கடும் தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை  குணமாகும். மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.மஞ்சள் பூசிக் குளிப்பதால் உடலில் தோன்றும் துர்நாற்றத்தை விரட்டலாம்.  மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசினால் படைகள், விஷக்கடிகள் நீங்கும். இவ்வளவு மருத்துவ குணங்களைக் கொண்ட மஞ்சளை  சமையல், அழகு சாதனம், மருந்து என தேவைக்கு ஏற்பட பயன்படுத்தலாம்.