சனி, 28 ஜனவரி, 2017

தூக்கத்தில் உளறுவது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

தூக்கத்தில் உளறுவது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக நம்மில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, யாரிடமோ பேசுவதை போல பேசிக் கொண்டிருப்பார்கள்.

இப்படி இரவில் தூங்கும் போது சிலர் தன்னை அறியாமல் பேசுவதை தான் நாம் தூக்கத்தில் உளறுதல் என்று கூறுகின்றோம்.

தூக்கத்தில் சிலர் உளறுவதற்கு என்ன காரணம் என்று நீங்கள் யோசித்தது உண்டா? நம் அனைவரின் உடம்பில் தூக்கத்தின் கட்டுப்பாட்டு மையமாக நமது மூளையில் இருக்கும் முகுளப் பகுதி செயல்படுகிறது.

ஆனால் நமது உடம்பில் உள்ள தாலமஸ், நடுமூளையின் வலைப்பின்னல் அமைப்பு மூளையின் தண்டுப்பகுதி ஆகிய உறுப்புகளின் ஒருங்கிணைந்த சில செயல்பாடுகளினால் தூக்கத்தின் தன்மைகள் சில சமயங்களில் மட்டும் மாறுபடுகிறது.

எனவே நாம் சில நேரங்களில் மிகவும் ஆழ்ந்து தூங்கும் போது, அந்த ஆழ்ந்த தூக்கத்தின் இறுதிக்கட்டத்தில், உணர்வு நரம்புகளின் தூண்டுதல்கள் மூலம் நாம் நம்மை அறியாமலே தானாகப் பேசுவதும், புலம்புவதும் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மட்டன் சாப்ஸ்:-

மட்டன் சாப்ஸ்:-
----------------
தேவையான பொருட்கள் :
-----------------------------
ஆட்டுக்கறி சாப்ஸ் துண்டுகள் - 10
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

கிரேவி செய்ய :
---------------
வெங்காயம் - 1
குடமிளகாய் - 1
அஜினமோட்டோ - 1 சிட்டிகை
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்

செய்முறை :
---------------
* ஒரு வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்.

* கிரேவியில் கொடுக்கப்பட்டுள்ள வெங்காயம், குடமிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மட்டன் சாப்ஸ், அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கலந்து அரைமணி நேரம் ஊறவிடவும்.

* குக்கரில் ஊற வைத்த கறியை போட்டு 5 விசில் போட்டு வேக வைக்கவும். விசில் போனவுடன் அந்த கறியை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

* ஒரு அடிகனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் வெங்காயம், குடமிளகாய் போட்டு வதக்கவும்.

* பின்னர் அதில் அஜினமோட்டோ, சோயா சாஸ், சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

* கடைசியாக அதில் பொரித்து வைத்துள்ள சாப்ஸையும் சேர்த்து கிரேவி திக்கானதும் இறக்கவும்.

ஆனியன் சிக்கன் வறுவல் :-

ஆனியன் சிக்கன் வறுவல் :-
--------------------------
தேவையான பொருட்கள்:-
------------------------
சிக்கன் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கரம் மசாலாத்தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :-
-----------
* சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* காய்ந்த மிளகாயை 2 ஆக கிள்ளி வைக்கவும்.

* சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறு சிறுத் துண்டுகளாக்கி கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முக்கால்வாசி வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் சிக்கனை போட்டு வதக்கவும்.

* பின்பு மசாலாத் தூள்களை சேர்த்து சிறிது நேரம் வதக்கி உடனே தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மிதமான தீயிலேயே பத்து நிமிடம் வேக விடவும். (இடையில் கிளறி கொள்ளவும்.)

* சிக்கன் வெந்து, தண்ணீர் வற்றியதும் நறுக்கி வைத்திருக்கும் மீதி வெங்காயத்தை சேர்த்து பிரட்டி இரண்டு நிமிடத்தில் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி விடவும்.

* இதை சாம்பார், தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். இதனுடன் குடைமிளகாயையும் வெங்காயம் போல் நறுக்கி சேர்க்கலாம். இன்னும் நல்ல சுவையுடன் இருக்கும்.

பசியைத் தூண்டும் மிளகு சீரக சூப்.

பசியைத் தூண்டும் மிளகு சீரக சூப்.

*தேவையான பொருட்கள் :*

பாசிப்பருப்பு - 100 கிராம்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
பிரியாணி இலை - 2,
வெங்காயம் - 2,
கேரட் - 2,
சீரகம், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

*செய்முறை :*

•• வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

•• பாசிப்பருப்பை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

•• குக்காரை அடுப்பில் வைத்து சூடானதும் சீரகம், மிளகு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், கேரட்டை போட்டு நன்கு வதக்கவும்.

•• அடுத்து அதில் ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கியவுடன், எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலந்து தண்ணீர் சேர்த்துக் குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.

•• விசில் போனவுடன் மூடியை திறந்து நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

•• சத்தான மிளகு சீரக சூப் ரெடி.

*குறிப்பு:*
இது பசியைத் தூண்டும். வயிறு மந்தம் சம்பந்தபட்ட பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு இதை அருந்தலாம்.

கோவில் புளியோதரை

கோவில் புளியோதரை.

*தேவையான பொருட்கள் :*

நல்லெண்ணை - 5 தேக்கரண்டி
வேர்கடலை - 1/4 கப்
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
அரிசி - 2 கப்

*வறுத்து பொடிக்க :*

நல்லெண்ணை - 1 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
தனியா - 1/2 தெக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
எள்ளு - 1 தேக்கரண்டி

*செய்முறை :*

•• வறுத்துப் பொடிக்க வேண்டிய பொருட்களை தனித்தனியாக வறுத்து எடுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

•• அரிசியை உதிரியாக வேகவைத்து கொள்ளவும்.

•• புளியை கரைத்து கொள்ளவும்.

•• கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளித்த பின் கடலை பருப்பு, உளுந்து, வேர்கடலை சேர்த்து பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.

•• அடுத்து, புளிக்கரைசலுடன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

•• இப்போது உப்பு போடக் கூடாது. ஏன்னா, கொதிச்ச பிறகு குழம்பு அளவு கம்மியாகும் போது உப்பு அதிகமாகிடும். அதனால் சாப்பாடு கிளரும் போது உப்பு போட்டுக்கொள்ளலாம்.

•• புளிக்கரைசல் நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்ததும் உதிரியாக வடித்த சாதம், தேவையான அளவு உப்பு சோத்து, அதனுடன் அரைத்து வைத்த அந்த பொடியையும் தேவையான அளவுக்கு சேர்த்து கலந்துவிடவும்.

•• 20 நிமிடத்திற்கு பிறகு பரிமாறவும்.

•• சூப்பரான கோவில் புளியோதரை ரெடி.

மொச்சை கத்திரிக்காய் குழம்பு.

மொச்சை கத்திரிக்காய் குழம்பு.

மொச்சை கத்திரிக்காய் குழம்பு சூடான சாதம், இட்லி, தோசைக்கு நல்ல பொருத்தமானது.

*தேவையான பொருட்கள் :*

மொச்சை - 1/2 கப்
கத்திரிக்காய் பிஞ்சாக - 6
பூண்டு - 7 பல்
சின்ன வெங்காயம் -  50 கிராம்
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 1
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - 1/4
புளிச்சாறு  - 2 மேஜைக்கரண்டி
சாம்பார் மிளகாய்ப்பொடி (அல்லது) தனி மிளகாய்த்தூள் - 2 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்

*தாளிக்க :*

எண்ணெய்  - 1 1/2 மேஜைக்கரண்டி
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்

*செய்முறை :*

•• மொச்சையை 6 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு வேக வைத்துக்கொள்ளவும்.

•• கத்திரிக்காயை வேண்டிய வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

•• வெங்காயம், தக்காளி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

•• வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் கறிவேப்பிலை, வெங்காயம் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

•• பின்னர் வெட்டிய கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.

•• கத்திரிக்காய் நிறம் மாறி வதங்கி வரும் போது தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

•• அடுத்து அதில் புளிச்சாறு, மிளகாய்த்தூள் மற்றும் 2 கோப்பை தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

•• கத்திரிக்காய் வெந்ததும் வேகவைத்த மொச்சை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

•• குழம்பு கெட்டியானதும் சூடான சாதத்துடன் பரிமாற மொச்சை கத்திரிக்காய் குழம்பு ரெடி.

சத்தான கம்பு காய்கறி கொழுக்கட்டை

சத்தான கம்பு காய்கறி கொழுக்கட்டை .

சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

*தேவையான பொருட்கள் :*

கம்பு மாவு - 1 கப் (200 கிராம்)
தண்ணீர் - 1/2 கப்
வெங்காயம் - 2
நறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி) - 3/4 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணை - 1 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப

*செய்முறை :*

•• வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

•• வாணலியில் கம்பு மாவை போட்டு, 7 முதல் 8 நிமிடங்கள் கம்பு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும்.

•• வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

•• அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து, சில நொடிகள் வதக்கவும்.

•• பின்னர், நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் பச்சைப்பட்டாணியை சேர்த்து வாணலியை சில நிமிடங்கள் மூடி வைக்கவும். அடிபிடிப்பது போல் இருந்தால் மட்டும், சிறிது தண்ணீர் தெளிக்கவும். காய்கறிகளில் உள்ள தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவையை சற்று ஆற விடவும்.

•• காய்கறிக் கலவையை கம்பு மாவு இருக்கும் பாத்திரத்தில் போடவும். சுவைக்கேற்ப உப்பைக் சேர்க்கவும்.

•• ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

•• சுடுநீரை கம்பு மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கவும். மாவு கையால் தொடும் சூட்டில் இருந்தால் அப்படியே நன்றாக சப்பாத்தி மாவு போல் உருட்டிப் பிசைந்து கொள்ளவும்.

•• மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

•• உருட்டிய மாவை இட்லிப் பாத்திரத்தில் வைத்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும். 

•• சத்தான கம்பு காய்கறி கொழுக்கட்டை ரெடி.

வெள்ளி, 27 ஜனவரி, 2017

படுக்கையறை மூலைகளில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால் பெரும் நன்மைகள் என்னென்ன?

படுக்கையறை மூலைகளில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால் பெரும் நன்மைகள் என்னென்ன?

நம் உடலுக்கு மட்டுமல்ல, நம்மை சுற்றி இருக்கும் இடங்கள் மற்றும் சுற்றுசூழலில் உண்டாகும் எதிர்மறை மாற்றங்களுக்கும் கூட செயற்கை பொருட்களை விட, இயற்கை பொருட்கள் தான் சிறந்த தீர்வை அளிக்கவல்லது.

அந்த வகையில் பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ள எலுமிச்சை உடலை மட்டுமின்றி, வீட்டையும் கூட சுத்தமாக வைத்துக்கொள்ள பெருமளவில் உதவுகிறது. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதாலும் ஒருசில உடல்நல குறைபாடுகள் பரவாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

*பாக்டீரியாக்கள்!*
நோய் பாதிப்பு உள்ளவர்கள் உறங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால், அந்த நோய் தொற்று பெருகாமலும், அதிகரிக்காமலும் பாதுகாக்க முடியும்.

*நுரையீரல் மற்றும் மூச்சு* நீங்கள் உறங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால், அதன் நறுமணம் அரை முழுவதும் பரவும். இதன் நறுமணத்தை சுவாசித்து உறங்குவதால் நுரையீரல் செயற்திறன் மற்றும் மூச்சு சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

*ஆஸ்துமா, சளி, அலர்ஜி!* இதுமட்டுமின்றி, எலுமிச்சை நறுமணத்தை சுவாசித்து உறங்குவதால் சளி, ஆஸ்துமா, அலர்ஜியை கட்டுப்படுத்தலாம். தொண்டை அடைப்பு கூட சரியாகும் என கூறப்படுகிறது.

*நறுமணம்!*
எலுமிச்சையின் நறுமணம் படுக்கையறையில் துர்நாற்றம் எழாமல் பார்த்துக் கொள்ளும். மேலும், நாள் முழுதும் நறுமணம் வீச உதவும்!

*பாதுகாப்பு!*
எலுமிச்சை நீரை பருகுவது இரத்தத்தை சுத்திகரிப்பு செய்து, உடல்நலனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இது வயதாகும் செல்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தி, சரும நலத்தையும் மேம்படுத்துகிறது. எலுமிச்சை தோலை வைத்து தேய்ப்பதால், முழங்கை, முழங்கால் பகுதிகளை முழுமையாக சுத்தம் செய்ய முடியும். மேலும், கருவளையம், பரு மற்றும் உச்சந்தலை பிரச்சனைகளுக்கும் இது நல்ல பலனை அளிக்கவல்லது.

தோல்நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட பீர்க்கங்காய்!!!

தோல்நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட பீர்க்கங்காய்!!!

நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும்.

•• முற்றிய பீர்க்கங்காயை மட்டும் சமைத்துண்பதால் மேற்கண்ட நன்மைகள் நமக்குக் கிடைக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது.

•• சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும்.

•• பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

•• சிறு குழந்தைகளின் கண்நோய் நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் போதும். ஆனால், அந்த இலைச்சாற்றை சூடுபடுத்தக்கூடாது.

•• பீர்க்கங்காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சு எண்ணெய்யாய்த் திகழ்கிறது.

•• இரத்த சோகை நோயாளிகள் இதன் வேரைக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடித்து, அருந்த வேண்டும். இலைச்சாற்றைப் போலவே இதுவும் கசப்பாகத்தான் இருக்கும்; ஆனால், சக்தி மிக்கது. இரத்த சோகை விரைந்து குணமாகும். கால் வீக்கமும் இதே கஷாயத்தால் குறையும்.

•• கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கங்காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள். காய்கறிகளுள் பச்சையாகச் சாப்பிடக் கூடாத காய்கறி இதுதான். தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைந்து குணமாவது உறுதி.

பெண்கள் ரெட் ஒயின் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்.

பெண்கள் ரெட் ஒயின் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்.

ரெட் ஒயின் அருந்துவதன் மூலமாகப் பெண்கள், தங்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்னையை சரிசெய்ய முடியும் என தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஒர் ஆய்வை நடத்தி உள்ளனர். அதில், ரெட் ஒயின், திராட்சைப்பழம், சாக்லேட், பாதாம், பிஸ்தா போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை அதிகளவு சாப்பிடும் பெண்களுக்கு, ஹார்மோன் சுழற்சி சீராகவும், பிரச்னை ஏதுமின்றி, இயல்பாகவும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இவ்வகை உணவுப்பொருட்களில் உள்ள பாலிஃபீனால் என்ற வேதிப் பொருள், ஹார்மோன் செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது. இதன்மூலமாக, உடல் எடை அதிகரிப்பு, மாதவிடாய் பிரச்னை, முடி கொட்டுதல், சரும பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளை எளிதில் தீர்க்க முடிவதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, அதிக உடல் எடை காரணமாக நீரிழிவு நோய் ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்க இந்த பாலிஃபீனால் பயன்படுகிறது.

பன்னீர் 65.

பன்னீர் 65.

சிக்கன் 65, கோபி 65 பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் பன்னீர் 65 கேள்விப்பட்டதுண்டா? ஆம், இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமான சுவையில் இருக்கும்.

இன்று மாலை நீங்கள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் ஏதேனும் செய்து சுவைக்க நினைத்தால், பன்னீர் 65 செய்து சுவையுங்கள்.

*தேவையான பொருட்கள்:*

பன்னீர் - 200 கிராம்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

*மாவிற்கு...*
மைதா - 1 1/2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

*செய்முறை :*

முதலில் பன்னீரை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் 'மாவிற்கு' கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையும் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு அந்த மாவில் பன்னீர் துண்டுகளைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் சூடானதும், பன்னீர் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பன்னீர் 65 ரெடி!!!