வியாழன், 3 ஆகஸ்ட், 2017

சத்தான காலை டிபன் மேத்தி தேப்லா


சத்தான காலை டிபன் மேத்தி தேப்லா

குஜராத்தில் மிகவும் பிரபலமானது இந்த தேப்லா. இதில் வெந்தயக்கீரையை சேர்த்து செய்யும் போது சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – ஒரு கப்,
கடலை மாவு – கால் கப்,
வெந்தயக்கீரை – அரை கட்டு,
ஓமம் – அரை டீஸ்பூன், உப்பு,
எண்ணெய் – தேவையான அளவு,
மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன்,
சர்க்கரை – சிறிது,
தயிர் – மாவு பிசைய தேவையான அளவு.

செய்முறை :

* வெந்தயக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். (இலைகளை மட்டும் எடுக்க வேண்டும்)

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, சுத்தம் செய்த வெந்தயக்கீரை, ஓமம், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சர்க்கரை, தயிர் சேர்த்து ஒன்றாகக்கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து, அரை மணி நேரம் ஊற விடவும்.

* அடுத்து பிசைந்த மாவை சப்பாத்திகளாக தேய்க்கவும்.

* தோசைக்கல்லைக் காயவைத்து, திரட்டிய சப்பாத்தியை போட்டு இரு புறமும் திருப்பிவிட்டு, அது உப்பும்போது, சற்று கனமான துணியைக் கொண்டு லேசாக அழுத்திவிடுங்கள். அதனுள் இருக்கும் காற்று, மற்ற இடங்களுக்குப் பரவி பூரி போல எழும்பி வரும். மறுபுறம் திருப்பிவிட்டு, மீண்டும் லேசாக துணியால் அழுத்திவிட்டு எடுத்து, சிறிதளவு நெய் தடவி வையுங்கள்.

* சூப்பரான மேத்தி தேப்லா ரெடி.

* இதற்கு தொட்டு கொள்ள தயிர் பச்சடி சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக