திங்கள், 14 ஆகஸ்ட், 2017

கிரீக் சாலட். Green Salad.



கிரீக் சாலட். Green Salad.

*தேவையானவை :*

வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சை குடமிளகாய், மஞ்சள் குடமிளகாய், சிவப்பு குடமிளகாய் - தலா ஒன்று
தக்காளி (கெட்டியானது) - 2
லெட்யூஸ் (சாலட் இலைகள்) - 4
பனீர்  - 100  கிராம்
ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு - தலா 2 டேபிள்ஸ்பூன்
ஓரிகானோ - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
பூண்டு பவுடர் - அரை டீஸ்பூன் (அல்லது பொடியாக நறுக்கிய பூண்டு - 2 பல்)
உப்பு - தேவைக்கேற்ப    

*செய்முறை :*

👁‍🗨 குடமிளகாய்கள், தக்காளி ஆகியவற்றை விதைகளை எடுத்துவிட்டு சதுரங்களாக வெட்டவும்.

👁‍🗨 வெங்காயம், வெள்ளரிக்காய், பனீர் ஆகியவற்றையும் சதுரமான துண்டுகளாக வெட்டவும்.

👁‍🗨 லெட்யூஸ் இலைகளைக் கைகளால் பெரிய துண்டுகளாகப் பிய்த்துப் போடவும். இவை எல்லாவற்றையும் ஒரு பெரிய பவுலில் சேர்க்கவும்.

👁‍🗨 அகலமான வாயுள்ள பாட்டிலில் ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ், ஓரிகானோ, பூண்டுப் பொடி அல்லது நறுக்கிய பூண்டு எல்லாவற்றையும் போட்டு மூடியைக்கொண்டு மூடி, நன்றாகக் குலுக்கவும். இதுதான் சாலட் டிரெஸ்ஸிங்.

👁‍🗨 நறுக்கிய காய்கறி கலவையுடன் சாலட் டிரெஸ்ஸிங்கை நன்றாகக் கலந்து பரிமாறவும்.

*குறிப்பு :*

வெளிநாடுகளில் கிரீக் சாலடில் ஃபெட்டா சீஸ் என்னும் சீஸ் வகையைச் சேர்ப்பது வழக்கம். இதற்குப் பதில் நம் நாட்டில் பனீர் சேர்க்கலாம்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக