ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

மட்டன் கீமா தோசை | Mutton Keema Dosa



மட்டன் கீமா தோசை | Mutton Keema Dosa

தேவையான பொருட்கள் :

மட்டன்  கொத்துகறி  -  150 கிராம்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 2
இஞ்சி  பூண்டு பேஸ்ட் -  2  ஸ்பூன்
மஞ்சள் தூள் -  அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1  ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பட்டை - 1
கிராம்பு - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டன்  கொத்துகறியை   கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து, அதில்  3  ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி  பூண்டு பேஸ்ட் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

பின்பு  கொத்துகறி   மசாலா  துாள்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, அடுப்பை  சிம்மில்  வைத்து, சிறிதளவு  தண்ணீர்   சேர்த்து  மட்டன் நன்கு வேகும் வரை பிரட்ட வேண்டும். மட்டன் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

பின்பு  தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், மாவைக் தோசையாக ஊற்றி அதன் மேல் தூவியது போல் மட்டன் கீமாவை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.   சுவையான மட்டன் கீமா தோசை ரெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக