திங்கள், 21 ஆகஸ்ட், 2017

உடல் எடையை குறைக்கும் கொள்ளு இட்லி



உடல் எடையை குறைக்கும் கொள்ளு இட்லி உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கொள்ளு - 1 கப்
பிரவுன் ரைஸ் (அ) இட்லி அரிசி - 3 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

கொள்ளு, பிரவுன் அரிசியை தனித்தனியாக ஊற வைக்கவும்.

கொள்ளுவை நன்றாக மைய அரைக்கவும். பிறகு அரிசியினை அரைத்து கொள்ளவும்,

ஒரு பாத்திரத்தில் கொள்ளு மாவு, அரிசி மாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 6 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இந்த மாவை இட்லியாக ஊற்றி எடுத்தால் சுவையான கொள்ளு இட்லி ரெடி.

மிக்ஸியில் அரைப்பதாக இருந்தால் இட்லி அரிசிக்கு கொள்ளு 3:1  என்ற பங்கு விகிதத்திலும், கிரைண்டரில் அரைப்பதாக இருந்தால் 4:1 என்ற பங்கு விகிதத்திலிலும் சேர்த்து அரைக்க வேண்டும்.
நன்றி...மாலைமலா்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக